டெல்லி: அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியப் பலன்கள் வழங்க தாமதமானால், அதை வட்டியுடன் கொடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பல மாநிலங்களில் ஓய்வுபெறும் அரசு ஊழியர்களின் ஓய்வூதிய பலன்கள் வழங்குவதில் கடும் தாதமம் செய்யப்படுகிறது. இதை ஒழுங்கப்படுத்தக்கோரி உச்சநீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. அதைத் தொடர்ந்து, வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதிகள், “சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களின் ஒத்திவைக்கப்பட்ட பகுதிகளை செலுத்துவதற்கான கால தாமதத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவித்தனர்.
பின்னர் வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், அரசு ஊழியர்களால் செய்யப்படும் சேவைகளுக்காக சம்பளம் வழங்கப்படுகிறது. அது அவர்களின் உரிமை. அது சட்டத்திற்குட்பட்டது. அதுபோல, ஓய்வூதியம் வழங்குவது என்பது ஓய்வூதியதாரர்களால் அரசுக்கு வழங்கப்பட்ட கடந்த கால சேவையாகும். இது ஒழுங்குமுறைகளால் அங்கீகரிக்கப்பட்ட உரிமை. அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பலன்கள் வழங்குவதை தாமதப்படுத்தும் அரசாங்கம், அதற்கு உரிய விகிதத்தில் வட்டியுடன் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.