
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். காலா, விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
பின்பு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குப்பெற்று பிரபலமானார்.
மேலும் நடிகை சாக்ஷி, சிண்ட்ரெல்லா, புரவி, அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சாக்ஷி அகர்வால், அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது திருமண கோலத்தில் கழுத்தில் தாலியுடன் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, புதிய நாள், புதிய லுக், புதிய தொடக்கம் என குறிப்பிட்டுள்ளார்.
இது விளம்பர ஷூட்டிங்கின் போது எடுத்த புகைப்படம் என்று ஹேஷ்டேக்கில் குறிப்பிட்டிருந்தார் சாக்ஷி, இதை கவனிக்காத ரசிகர்கள், அவருக்கு திருமணம் ஆகிவிட்டதாக கருதி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
[youtube-feed feed=1]