திருமணத்திற்கு பிறகு ஆர்யாவும், சாயிஷாவும் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கி வரும் ‘டெடி’ படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர் .

மே மாதம் 23-ஆம் தேதி துவங்கிய ‘டெடி’யின் படப்பிடிப்பு இப்போது கடைசி கட்டத்தை எட்டியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஞானவேல்ராஜாவின் ‘ஸ்டூடியோ கிரீன்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார். யுவா ஒளிப்பதிவு செய்கிறார், சக்தி சரவணன் இப்படத்திற்கான் சண்டை காட்சிகளை அமைக்கிறார்.சிவநந்தீஸ்வரன் படத்தொகுப்பு செய்கிறார்.

குழந்தைகளை கவரும் விதமான படமாக உருவாகி வரும் இந்த படத்தில் ஆர்யா, சாயிஷாவுடன் சதீஷ், கருணாகரன் ஆகியோரும் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் சாக்ஷி அகர்வால் சமீபத்தில் டெடி படத்தில் இணைந்துள்ளதாகப் படக்குழு அறிவித்தது. ‘டெடி படத்தில் நான் ஆர்யாவை ஒரு தலையாகக் காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன் என சாக்ஷி கூறியுள்ளார்.