
அஜித்தின் வேதாளம் சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த ரீமேக்கை மெஹர் ரமேஷ் இயக்க, சிரஞ்சீவி நாயகனாக நடிக்கிறார்.
அனில் சுக்ரா – ராம்சரண் – ஏ.எம்.ரத்னம் மூவரும் இணைந்து தயாரிக்கவுள்ளனர்.
வேதாளத்தில் நாயகியைவிட தங்கை கதாபாத்திரம் முக்கியமானது. இந்த கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் கீர்த்தி சுரேஷை கேட்டிருந்தனர். அவர் 3 கோடிகள் சம்பளம் கேட்க, இப்போது சாய் பல்லவியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அனேகமாக அவர் நடிக்கலாம் என்கின்றன செய்திகள்.
வேதாளம் படம் 2018 இல் வங்க மொழியில் சுல்தான் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. விரைவில் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட உள்ளது.
Patrikai.com official YouTube Channel