சிம்லா

மாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஆற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் காணாமல் போய் உள்ளர்.

முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி தனது நண்பர்களுடன் இமாசலப் பிரதேச மாநிலத்துக்கு சென்றுள்ளார்.   அவர் பயணம்  செய்த கார் சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்க்ள்ளாகியது.

இந்த விபத்தில் சைதை துரைசாமியின் மகன் வெற்றியைக் காணவில்லை வெற்ற் பயணம் செய்த கார். இமாச்சலப்பிரதேசத்தின் காசங் நாலா என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, ஆற்றுக்குள் கவிழ்ந்தது.

காரில். சைதை துரைசாமியின் மகன் வெற்றி உள்பட 3 பேர் பயணம் செய்துள்ளனர். வெற்றியுடன் சென்ற திருப்பூரைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் காயங்களுடன் மீட்கப்பட்டார். மேலும் கார் ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் சைதை துரைசாமி மகன் வெற்றியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.