துரிய சக்கரம் Pineal Gland 

அன்பார்ந்த பத்திரிக்கை.காம் வாசகர்களே, முதலில் நாம் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாதகம், விசுத்தி, சுழிமுனை ஆகியவற்றைப்பார்த்திப்பார்த்தோம். 7வது சக்கரமாகிய துரியசக்கரத்தைப் பற்றி இப்போது பார்ப்போம்.

இது மூளையின் மையப்பகுதியில் இருக்கும், பீனியல் சுரப்பி அமைந்திருக்கும் இடத்தில் இருக்கும் சக்கரமாகும், இது மூளையில் இருக்கும் ஆயிரக்கணக்கான செல்களின் தொகுப்புகளை கொண்டிருக்கும் மூளையின் மையப்பகுதியில் இருப்பதால் சகஸ்ராதாரம் என்று அழைக்கப்படுகிறது.

தாமரைச் சக்கரம் என்ற பெயர்கள் உண்டு. இது உச்சந்தலை பகுதியில் ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை வடிவ அமைப்பில் உள்ளது.

இந்தச் சக்கரத்தின் மூலம்தான் ஒருவர் ஞானத்தைப் பெறமுடியும். பிரபஞ்சத்துக்கும், நமக்கும் உள்ள தொடர்பினை தெளிவு படுத்துகின்ற சக்கரம் இது.

மேலும் இந்நிலையில் பீனியல் சுரப்பி , கட்டுப்படுத்தி, நம் வசம் இயக்கக்கூடிய தன்மை இச்சக்கரத்திற்கு உண்டு. இந்நிலையில் தவமியற்றுவதற்கு அல்லது தியானம் செய்வதற்கு துரிய தவம் என்றழைப்பர்

துரிய தவமானது உச்சந்தலையில் உணர்வை நிறுத்தி இயற்றும் தவம். இதற்கு பிரம்ம மந்திரத் தவம் என்றும் பெயர் உண்டு.

இந்தப்பயிற்சியால் உயிராற்றலானது மூளை செல்களின் உள்ளே சென்று நல்லாற்றைப் பெருக்கி மூளை செல்களை சீர் செய்கிறது. இப்பயிற்சியை தொடர்ந்து செய்துவந்தால் முன்வினைபாவப்பதிவுகளை நீக்கமுடியும்.

சித்தர் பாட்டு

“தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள்
பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள்
சென்னியில் வைத்த சிவன் அருளல்”

துரிய தவம் பயன்கள்

மன அலைச்சுருள் 8லிருந்து 13 வரை ஒடுங்கி ஆல்பா நிலைக்கு சென்று மன அமைதி கிடைக்கிறது

முன்வினைப்பதிவுகளும் (Heriditary) வினைகள் தீர மற்றும் நோய் வாராமல் காக்கவும் பயன்படுகிறது

ஐம்புலன்கள் ஒடுங்கி ஞாபகச்சக்தி மற்றும் ஒருநிலைப்படுத்துதல் மேலோங்குகிறது
இத்தவத்தினால் உள்ளுணர்வு மற்றும் விழிப்பு நிலை ஏற்பட்டு ஆற்றல் பெருகி அறிவுநிலை மேலோங்குகிறது (conscious to super conscious)

பிராப்த கர்மா (தன்வினை) இருந்து விடுவிக்கிறது.

எண்ணம் ஆராய்வதும், தற்சோதனையும், கவலையை ஒழிக்கவும் இந்த தியானம் உதவும்

ஆன்மா தனது பழி செயல் பதிவுகளிலிருந்து தூய்மை பெற ஏற்றதோர் பயிற்சி
துரிய நிலை தவமாகும்

துரிய நிலைத்தவம் நடுமனத்தில் நின்று ஆற்றப்படுவதால், அறிவு நடுமனத்தை வெற்றிக்கொள்கிறது.எனவே, மனத்தின் விரியும் தன்மை இத்தவத்தால் கூடுகிறது

நாம் எண்ணும் உயரிய எண்ணம் பல பேர் உள்ளத்தில் பிரதிபலிக்கும்

நாம் கொடுக்கும் சங்கற்பங்களும், வாழ்த்துக்களும் நன்கு செயல்படும்.

மனத்திற்கு வேகமும், நுட்பமும், எளிதில் உணர்ச்சி வயப்படாத நிலை
கிடைக்கும்.

எண்ணத்தை ஆராயவும், அகத்தாய்வு (Introspection) செய்யவும், கவலைகளை
ஆராய்ந்து ஒழிக்கவும் துரிய நிலைத் தவம் பெரிதும் துணையாக இருக்கும்

உள்ளக் களங்கமும் உடல் களங்கமும் துடைக்கப்பட்டு தூய்மை உண்டாகிறது

இத்துடன் சக்கரங்கள் பற்றிய பதிவு முடிவடைகிறது

மருத்துவர் பாலாஜி கனகசபை., M.B.B.S, PhD
அரசு மருத்துவர்
கல்லாவி,கிருஷ்ணகிரி மாவட்டம்
99429 22002