சாம்பிராணியின் மருத்துவப்பயன்கள் :மருத்துவர் பாலாஜி கனகசபை

Must read

சாம்பிராணி (Frankincense / Benzoin)

நம் இந்திய பாரம்பரியத்தில் பண்டைய காலத்தில் இருந்து சாம்பிராணி பயன்பாட்டில் இருந்துவருகிறது, ஆனால் இன்றைய அவசரக்காலத்தில் சாம்பிராணியை பயன்படுத்துவது குறைவாகவே இருக்கிறது.

சாம்பிராணியின் எல்லாவிதமான பயன்பாடுகள் குறித்து இந்தப்பதிவில் காண்போம்.

சாம்பிராணியானது ஒருவிதமான மரத்தில் இருந்து கிடைக்கும் பிசின் பூ. ஏறக்குறைய 2 முதல் 14 மீட்டர் வரை வளரக்கூடியது இம்மரம், சீதோஷ்ண தப்பவெப்பத்தில் வளரக்கூடிய ஒரு மரமாகும். இந்த மரத்தில் இருந்து கிடைக்கூடிய நறுமணப்பொருட்கள் (Storax or Benzoin) பயன்பாட்டில் இருந்து வருகிறது. இது கிரேக்கம் மற்றும் ரோமானிய நாகரீகத்திலும் மற்றும் தாய்லாந்து சுமேரியா போன்ற நாடுகளிலும் பயன்பாட்டில் இருந்துவருகிறது.

‘இது மிகுந்த நறுமணம் கொண்டதாகவும், ஆன்மீகப்பயன்பாட்டிற்கு ஏற்றதாகவும் மக்களிடையே இன்றுவரை பயன்பாட்டில் இருந்துவருகிறது

நவீன மருத்துவத்தில் Tincture of Benzoin என்ற மேற்பூச்சு மருந்தாக பயன்படுகிறது. compound of Benzoin இரணங்களை ஆற்றும் மற்றும் தோல்நோய்களுக்கு தேவைப்படும் மருந்தாகவும் பயன்படுகிறது.

Tincture of Benzoin பயன்கள்

1.குழந்தைகளுக்கு Clubfoot எனப்படும் கால் திரும்புதல் சிகிச்சைக்கு பயன்படுகிறது.
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC5333691/

2.கால், கைகளில் ஏற்படும் வெடிப்பு மற்றும் சிறு காயங்கள், இரணங்கள் ஆற்றுவதற்கு மேற்பூச்சாக பயன்படுகிறது.

compound of Benzoin பயன்கள்

சுவாசப்பாதையில் மற்றும் தொண்டையில் ஏற்படும் கட்டி, வீக்கங்களை சரி செய்கிறது,
குரல் வளை மற்றும் சுவாசக்குழாயில் ஏற்படும் வீக்கம் சரியாகிறது, குரலையும் நன்கு பலப்படுத்துகிறது

தோலில் ஏற்படும் இரணங்களையும், வெட்டுப்புண்களையும் ஆற்றுகிறது

நீண்ட நாட்களாக படுகைக்கை சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நோயாளிகளுக்கு ஏற்படும் Bedsores புண்களை ஆற்றுகிறது

தோலில் ஏற்படும் வெடிப்புகளை (Cracked skin)சரி செய்கிறது

பல்லில் ஏற்படும் பற்கூச்சம், பற்களில் வீக்கம் இவைகளை குணப்படுத்துகிறது.
இதர பயன்கள்

சித்த மருத்துவப் பயன்கள்

துவாதசி தங்கண்ணோய் மாறாத சென்னிவலி
யோதமுறு பீநசத்துன் போட்டுங்காண்- பூதலத்தில்
வேம்பிதுதா னென்ன மிகுகசப்பைத் தானளிக்குஞ்
சாம்பிராணி சரக்குத் தான்.

————————சித்தர் பாடல்கள்

(இதுவுமது)
வாதச் சயித்தியமும் மாற தலைவலியும்
ஓத நீர் பீனிசம் மோடிப்போம்-வேதனையாற்
றேம்பும் பிணிவிக்கற் றீராப்பற் கூச்சம்போம்
சாம்பிராணி யின்குணத்தைச் சாற்று.
————————சித்தர் பாடல்கள்

பயன்பாடுகள்

1.வேம்பைப்போல கசப்புள்ள சாம்பிராணி
வாதகபம், விழிநோய், நீங்காத சிரநோய், சலபிசம் போன்றவை நீங்கும்
2. தலைவலி,sinusitis எனப்படும் பீணிசம், விக்கல், பற் கூச்சம் இவை போகும்.
3.நல்ல எண்ணெயில் சாம்பிராணி தூளை காய்ச்சி, இரு துளி காதில் விட காதுவலி நீங்கும்.
4.நல்ல எண்ணெயில் சாம்பிராணி தூளை காய்ச்சி உடலில் தேய்க்க வாதவலி போகும்
5.சாம்பிராணி தூளை கங்கு இருக்கும் தூளைப்போட்டு புகைப்படித்தால் கூந்தல் நறுமணம் பெறும், குளித்தபின்பு இதுபோன்ற சாம்பிராணிப்புகையை பிடித்துவந்தால் சளி சம்பந்தப்பட்ட சீதள நோய்கள் நீங்கும். சர்வதோசம் நீங்கும்.மனம் ஒருநிலைப்படும், மனக்கவலை நீங்கும்

இரண்டு குண்டுமணி அளவு சாம்பிராணித்தூளை அதிக அளவு நாட்டுச்சக்கரை சேர்த்து உண்டால் சீதளம் , சுரம் , ஜலதோசம் இவை நீங்கும். தாது பலப்படும்

சாம்பிராணிப்பொடியை பொடி செய்து புகையுண்டாக்க சீதளம் மற்றும் வறட்டு இருமல் நீங்கும். இருதயத்திற்கு பலம் கொடுக்கும், இத்துடன் படிகாரத்தைச்சேர்த்து புகையுண்டாக்கினால் பற்கூச்சம், வலி, இரணம் இவைகள் நீங்கும்.சுவாசக்கோளாறுகள் நீங்கும்

ஆன்மீகம்

கோயில்களில் மற்றும் பண்டிகைக்காலங்களில் சாம்பிராணியை பயன்படுத்தி வழிப்பட்டு வருவது நம் சுற்றுப்புறத்திற்கும் நல்லது, ஆரோக்கிய வாழ்க்கைக்கு ஏற்றது. குறிப்பாக கம்ப்யூட்டர் சாம்பிராணியை தவிர்க்கவும்

குறிப்பு

குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பால்கொடுப்பவர்கள் இதை தவிர்க்கவும்

ஒருவேளை சாம்பிராணி ஒவ்வாமை (Allergy) இருப்பவர்களும் தவிர்க்கவும்

மருத்துவர் பாலாஜி கனகசபை., M.B.B.S, PhD
அரசு மருத்துவர்
கல்லாவி,கிருஷ்ணகிரி மாவட்டம்
99429 22002

More articles

Latest article