சஜிடேரியஸ்A* கருந்துளை சுவராசிய தகவல்கள்

இன்று எல்லா செய்திகளிலும் கருந்துளைப் பற்றிய செய்திபெரியாக பேசப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வரு கின்றது. எப்படியென்ன அந்த கருந்துளை என்கிறீர்களா?

கருந்துளை குறித்த சுவாரசிய தகவல்களை மட்டும் இங்கே காண்போம்

விண்வெளி பகுதிகளை அவர்கள் அறிவுக்கு ஏற்றவாறு நம் முன்னோர்கள் இராசி மண்டலமாக பிரித்து வைத்திருக்கிறார்கள்.
தனுசு ராசி திசையில் உள்ள வெற்றுப்புள்ளியை சூரியன் உட்பட பல விண்மீன்கள் சுழன்று வருகின்றன. சஜிடேரியஸ்A* (Sagittarius A*) எனப்படும் இந்த மையத்தின் அருகே உள்ள விண் மீன்களின் சுழல் வேகத்தை வைத்து கணக்கீடு செய்தபோது நாற்பது லட்சம் சூரியன்களின் நிறை வெறும் ஆறுகோடி கிலோமீட்டர் பந்து அளவில் அங்கே குவிந்து கிடந்தது. அவ்வளவு திணிவு என்றால் அதன் ஈர்ப்பு விசை மேலோங்கி கருந்துளையாக மாறி இருக்க வேண்டும் என இயற்பியல் தத்துவங்கள் கூறுகின்றன. எனவே நமது கேலக்சியின் மையத்தில் ராட்சச கருந்துளை உள்ளது என கருத்தப்பட்டது.

இந்த கருந்துளையைத்தான் விஞ்ஞானிகள் கணினி வழியே படம் எடுத்துள்ளனர். இதில் அப்படி என்ன அதிசயம் என்கிறீர்களா?

கருந்துளை என்பது எந்த பொருளையும் உள்வாங்கும் தன்மை கொண்டது, ஆனால் அது ஒளியை வெளியிடாது. ஒளியை வெளியீடாத ஒன்றிலிருந்து படம் எப்படி பிடிக்கமுடியும்? ஆச்சர்யம்தானே. இவற்றினை படம் எடுக்கத்தான்  நிகழ்வு தொடுவான தொலைநோக்கி  எனப்படும் Event Horizon Telescope உருவாக்கப்பட்டது. இது உலகில் எட்டு இடங்களில் அமைக்கப்பட்ட வானலை தொலைநோக்கிகளின் பிணையவழி இயங்கும் தொலைநோக்கி. அந்த எட்டு ‘தொலைநோக்கிகள்” கீழே விவரமாககொடுக்கப்பட்டுள்ளது.

1) சிலி நாட்டில் இருக்கும் அட்டகாமா பெரிய நுண்ணலை அலைவாங்கி அணி
(Atacama Large Millimeter Array)

2) சிலியில் உள்ள அட்டகாமா பாலைவனத்தில் அமைந்துள்ள 12 மீட்டர் விட்டமுள்ள தொலைநோக்கி
(Atacama Pathfinder Experiment)

3) அரிசோனாவில் உள்ள 10 மீட்டர் விட்டமுள்ள ஐன்ரிச்சு எர்ட்ஃசு கீழ்மில்லிமீட்டர் தொலைநோக்கி
(Heinrich Hertz Submillimeter Telescope)

4) எசுப்பானியாவில் சியெரா நெவாடா என்னும் இடத்தில் அமைந்துள்ள 30 மீட்டர் விட்டமுள்ள மில்லிமீட்டர் நுண்ணலை வாங்கி தொலைநோக்கி
(RAM 30m telescope)

5) அவாயியில் உள்ள சேம்சு கிளர்க்கு மாக்ஃசுவெல் தொலைநோக்கி இது 15 மீட்டர் விட்டமுள்ள கிண்ணி.
(James Clerk Maxwell Telescope)

6) பெரிய மில்லிமீட்டர் நுண்ணலை தொலைநோக்கி. இது மெக்ஃசிகோவில் உள்ள சியெரா நேகிரா என்னும் இடத்தில் உள்ளது. 50 மீட்டட் விட்டமுள்ள மாபெரும் தொலைநோக்கி. (Large Millimeter Telescope)

7) தென்முனைத் தொலைநோக்கி. இது 10 மீட்டர் விட்டமுள்ள தொலைநோக்கி. இது மில்லிமீட்டர் முதல் மீட்டர் வரையிலான மின்காந்த அலைகள வாங்கும் திறன் கொண்ட தொலைநோக்கி. (South Pole Telescope)

8) கீழ் மில்லிமீட்டர் நுண்ணலை தொலைநோக்கி அணி. இதுவும் அவாயியில் உள்ளது (Submillimeter Array)

இந்த எட்டு தொலைநோக்கிகளும் இருக்கும் இடங்களைக் கீழ்க்காணும் படம் காட்டுகின்றது.

சஜிடேரியஸ்A* (Sagittarius A*)  இருக்கும் தொலைவோ 55 ஒளியாண்டுத் தொலைவு. அதாவது 20 மைக்குரோநொடிப்பாகை அளவான மீச்சிறு கோணத்தில் உள்ளதைப் பிடித்துள்ளார்கள். இந்த 20 மைக்குரோ நொடிப்பாகை என்பது நிலாவில் இருந்து பார்த்தால் ஒரு சொற்றொடரின் இறுதியில் உள்ள முற்றுப்புள்ளியைப் பார்ப்பது போன்றது. (அதற்குத் தேவைப்படும் சிறுகோணம்) அவ்வளவு நுண்ணிய படத்தினை மேலே உள்ள எட்டுத்தொலைநோக்கிகளைக் ஒன்றிணைத்து அதிலிருந்து கிடைத்த தகவல்களை சுப்பர் கணினிக்கு கொடுத்து அந்த கணினியானது தன்னிடம் இருந்த நிரல்களின் அடிப்படையில் தானே படத்தினை வரைந்துள்ளது. இது எவ்வளவு பெரிய சாகசம் தெரியுமா?

கருந்துளையை எப்படி கண்டறிந்தார்கள்

ஹுப்புல் விண்வெளி தொலைநோக்கி ஒரு விண்மீனை படம் எடுத்தது. 2007-ல் ஆயிரம் ஆயிரம் சூரியன்களின் பிரகாசத்தில் ஒளிர்ந்த அந்த விண்மீன் 2015-ல் எடுக்கப்பட்ட படத்தில் காணவில்லை. விண்மீன் வெடித்து சிதறி இருந்தால் வெடிப்பின் தடயம் காண வேண்டும். எதுவுமே இல்லை. சுமார் 25 சூரியன்களின் நிறை கொண்ட N6946-BH1என்ற பெயரைத் தாங்கிய இந்த விண்மீன் காணாமல் போய்விட்டது. தனது சொந்த ஈர்ப்பு விசையால் தனக்குள்ளேயே நிலைகுலைந்து இந்த விண்மீன் கருந்துளையாக மாறிவிட்டது என அர்த்தாபத்தி நியாயத்தின் அடிப்படையில் முடிவுக்கு வருகிறார்கள் விஞ்ஞானிகள்.

கருந்துளையை சுற்றியுள்ள பொருள்களைக் கவர்ந்திழுத்து கபளீகரம் செய்யும்போதுகுறிப்பிட்ட பாங்கில் எசஸ் கதிர்களை வெளிப்படுத்தும். இரண்டு நியுட்ரான் விண்மீன்கள் மோதிக்கொண்டுகருந்துளை உருவாகும் போதும், இரண்டு சிறு கருந்துளைகள் மோதிப் பெரிய கருந்துளை உருவாகும் போதும்குறிப்பிட்ட வகையில் ஈர்ப்பு அலைகளை உமிழும். இது போன்ற பல்வேறு மறைமுக சான்றுகள் கிடைத்துள்ளன என்றாலும் இதுவரை கருந்துளையின் நேரடி சான்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

-செல்வ முரளி

தொலைநோக்கிகள் விபரம் :  முனைவர் சி.ஆர்.செல்வகுமார்