ந்திய முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான அப்துல் கலாம் அவர்கள் 2020ல் இந்தியா வல்லரசாகும் என்றும்,  அது இளைஞர்களின் கையில் தான்  இருக்கிறது என்றும் அடிக்கடி பேசியவர். அவரது நினைவுநாளான இன்று வல்லரசு என்கிற வார்த்தை மிக அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில் இன்று மதுரை அலங்காநல்லூரில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம்  கூட்டமொன்றில் பேசினார்.

வல்லரசு கனவு குறித்து தனது பேச்சில் குறிப்பிட்ட அவர், “ “இந்தியாவின் வல்லரசு கனவு வயல்வெளிகளில் இருந்து தான் வர வேண்டும். விவசாயத்தையும், விவசாயிகளையும் அழித்து விட்டு வல்லரசாக ஆகவே முடியாது” என்று தெரிவித்தார்.

மேலும் அவர்,” யார் மீதும் எந்த மொழியையும் திணிப்பது தவறு. யாராக இருந்தாலும் அவரது சொந்த விருப்பத்தின் பெயரிலேயே பிற மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்” என்றும் கூறினார்.