WHATSAPP SAFE 1
அமெரிக்க அரசாங்கத்தின் FDI , சான் பெர்நார்டினோ கொலையாளிகள் ஒருவரான  ரிஸ்வான் பாரூக் என்பவர் பயன்படுத்திய ஆப்பிள் ஐ-போனில் உள்ள தகவல்கள் தமக்கு வேண்டுமென ஆப்பிள் நிறுவனத்திடம் கோரி போராடிவருகின்றது. ஆப்பிள் நிறுவனம், அமெரிக்க அரசின் இந்த கோரிக்கை நிறுவனத்தின் உரிமைகளை மீறும் செயல் எனக் கூறி  தகவல் தர மறுத்து
வருகின்றது. வழக்கு தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.
மேலும், ஒரு சந்தேகப்படும் கொலையாளி அனுப்பிய வாட்சப் தகவலை போலிசுக்குத் தர மறுத்ததால் பெல்ஜியத்தில் ஒரு முகநூல் நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சோவியத் உக்ரைனில்  கண்காணிப்பு வளையத்தில் வளர்ந்த வாட்ஸப் நிறுவனர் ஜான் கவும் இதற்கெல்லாம் அஞ்சப் போவதில்லை எனக் கூறி புதிய சேவையாக இனி வாட்ஸ்ப் மற்றும் முகனூல் மெசஞ்சரில் பாதுகாப்பான தகவல் பறிமாற்றச் சேவையைத்   துவக்கவுள்ளார். இதன் மூலம் நாம் அனுப்பும் தகவல் போலிசுக்கு கூட பகிரப்படமாட்டாது.
இதனை அடுத்து முகநூல் மற்றும் வாட்சப் ஆகிய இரண்டிலும், உயரிய தொழிற்நுட்பம் சேர்க்கப் பட்டு, பாதுகாப்பு வசதிகளை அதிகரித்து இனி அனுப்பப்படும் தகவல்களை குறிப்பிட்ட பெறுநர் மட்டுமே படிக்கும் அளவிற்கு மாற்றப்படவுள்ளது.
18  மாதங்கள் கடுமையாக உழைத்து இந்தப்
பாதுகாப்பு வசதி உருவாக்கப் பட்டுள்ளதாக வாட்ஸப் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.