கோவை
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சத்குரு ஜக்கி வாசுதேவ் சிகிச்சை முடிந்து கோவை திரும்பி உள்ளார் \
கடந்த 17 ஆம் தேதி கோவை ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் மற்றும் ஈஷா அறக்கட்டளையின் தலைவரான சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு அவசரக்கால மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அரசியல் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் அவருடைய உடல்நலம் பற்றி விசாரித்து வந்தனர்.
சிகிச்சைக்குப் பிறகு, சத்குரு ஜக்கி வாசுதேவ் உடல்நலம் முன்னேறிய நிலையில் அவர் கடந்த 27 ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இன்று கோவை திரும்பினார். கோவை விமான நிலையத்தில் அவருடைய சீடர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அவரை வரவேற்க திரண்டிருந்தனர்.
அவர், அங்கிருந்து புறப்பட்டு வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். ஈஷாவின் நுழைவு வாயிலான மலைவாசலில் பழங்குடி மக்கள் மற்றும் சுற்றுவட்டாரக் கிராம மக்கள் ஒன்று கூடி அவர்களின் பாரம்பரிய முறையில் சத்குருவிற்கு உணர்ச்சிப்பூர்வமான வரவேற்பு அளித்தனர்.
சத்குருவின் வருகையையொட்டி, ஒட்டுமொத்த ஈஷா யோக மையமும் வண்ணமயமான அலங்காரங்களுடன் விழா கோலம் பூண்டது. ஈஷாவில் தங்கி இருக்கும் ஆசிரம வாசிகளும், தன்னார்வலர்களும் சத்குருவை மீண்டும் பார்த்ததில் எல்லையில்லா மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.