சாவிதான்யா கொடுத்தாரு சச்சினு! காரு கொடுத்தது சாமு!

Must read

ரியோ ஒலிம்பிக்கில்  சாதித்த சிந்து, சாக்சி மாலிக், டிபாகர்மகர் ஆகியோருக்கு ஹைதராபாத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டு, சச்சின் கையால் பிஎம்டபிள்யூ சொகுசு கார் வழங்கப்பட்டது.
உடனே, “சச்சின் கார் பரிசளித்தார்” என்று செய்தி பரவி விட்டது.
14095775_1074088339293877_4361038647281461940_n
ஆனால், தன் சொந்த காசை போட்டு, காரை வாங்கி, சச்சின் கையால் கொடுக்க வைத்ததவர் சாமுண்டேஸ்வரநாத் என்கிற சாமு.  சிந்து அருகில் நிற்கிறாரே, சிகப்பு டி ஷர்ட்.. அவர்தான்.  ஹைதராபாத் டிஸ்ட்ரிக்ட் பாட்மிண்டன் அஸோஸியேஷனின் தலைவராக இருக்கிறார்.
இவரது செலவில் விமானத்தில் பறந்துவந்து, சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு “காரு கொடுத்தாரு” என்று பெயரையும் வாங்கிக்கொண்டு கிளம்பிவிட்டார் சச்சின்.
ஆனால் காரை கொடுத்த சாமு, கவலைப்படவில்லை. “சச்சின் கொடுத்ததாகவே இருக்கட்டுமே..!” என்கிறாரம் சிரித்தபடி.
பெரிய மனசுதான்!

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article