இளம் பெண்கள் நடத்தும் பார்பர் ஷாப்பில், முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் ஷேவ் செய்துகொண்டபுகைப்படம் வைரலாகி வருகிறது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

உத்திரபிரதேசத்தில் பார்பர் ஷாப் நடத்தி வந்த ஒருவர் திடீரென மரணத்தை தழுவிய நிலையில், நிலைகுலைந்த அவரது குடும்பத்தில், அவரது மகள்கள் தந்தையின் பார்பர் ஷாப்பை ஏற்று நடத்தி வருகின்றனர். இது குறித்து கேள்விப்பட்ட சச்சிங்ன, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களை சந்தித்து பாராட்டிய சச்சின் டெண்டுல்கர், அந்த பெண்ணிடம் ஷேவிங்கும் செய்துக்கொண்டார்
இதுதொடர்பாக சச்சின் தன் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அந்த படம் வைரலாகி வருகிறது.
சச்சின் புகைப்படத்துடன் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில், ”இதற்கு முன் இப்படி ஒரு அனுபவத்தை நான் பெற்றதில்லை என்று குறிப்பிட்டுள்ளவர்,. இன்றைய தினத்தில், இந்தச் சாதனையும் நிகழ்த்தப்பட்டு விட்டது. சலூன் கடைகளில் பணிபுரியும் பெண்கள், எத்தனை மரியாதைக்குரியவர்கள்… கனவுகளில் எந்த பேதமுமில்லை ” என்று கூறியிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
[youtube-feed feed=1]