சபாஷ் நாயுடுபடத்தின் படப்பிடிப்பு அமெரிக்கவாவில் துவங்க இருக்கிறது. இதற்காக  கமல்ஹாசன் தலைமையிலான குழு அமெரிக்கா சென்று இறங்கிவிட்டது.  இது குறித்து அமெரிக்காவில் இருந்து நடிகர் கமல்ஹாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
சபாஷ் நாயுடு” என்ற எங்கள் புதிய திரைப்பட படப்பிடிப்புக்கு நானும், எங்கள் திரைக்குழுவைச் சேர்ந்தவர்களும் லாஸ் ஏஞ்சல்ஸ் வந்து சேர்ந்திருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்களுக்கு மிகுந்த உற்சாகமளிக்கும் இந்தத் தயாரிப்பின் துவக்க கட்டங்களே முழு வீச்சில் அமைந்துள்ளன.  திரைத்துறையின் ஏறத்தாழ அனைத்து திரைப்படத் தயாரிப்புகளைப் போலவே இதன் தயாரிப்பிலும், அதிலும் குறிப்பாக இத்தனை பிரம்மாணடமான, நுட்பங்கள் நிறைந்த தயாரிப்பில் தவிர்க்கவே முடியாத, முதல் கட்ட சவால்களை எதிர்கொண்டிருக்கிறோம்.
ஆனால் மிகவும் திறமை வாய்ந்த, புரிந்துணர்வுடன் துணை நிற்கும் நடிக நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் இத்திரைப்படத்துக்கு அமைந்துள்ளது என் நற்பேறு என்று மகிழ்ச்சியடைகிறேன்.
kamal-story_647_043016110241
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் எங்களுக்கு தொடர்ந்து அளித்து வரும் நல்லாதரவை இங்கு நன்றியுடன் நினைவு கூர்கிறேன். எங்களது தயாரிப்பு நிறுவனம் அமெரிக்காவுக்கு படப்பிடிப்பு செல்லும் ஒவ்வொரு முறையும் மிகுந்த புரிந்துணர்வுடன் அவர்கள் எப்போதும் எங்கள் பயணம் இனிமையான ஒன்றாக அமையும் வகையில் ஆகச் சிறந்த உதவிகளை நல்கியுள்ளனர்.
பொதுவாகவே, நம்பகத்தன்மை கொண்ட, நேர்மையான தென்னிந்திய திரைப்பட படப்பிடிப்பு முயற்சிகளை அமெரிக்காவில் மேற்கொள்ளும் எவருக்குமே அவர்கள் ஆதரவாக இருந்துள்ளனர் என்பதை நான் தென்னிந்திய திரைத்துறை சார்பாகவே சொல்வதாகக் கொள்ளலாம்.
அவர்களது நேசம் மிகுந்த உதவிகளுக்கு நன்றி கூறி, திரைத்துறையினரின் இது போன்ற மேலும் பல முயற்சிகளை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்..இவ்வாறு தனது அறிக்கையில்  கமல்ஹாசன்  தெரிவித்துள்ளார்.