அஜ்மீர்: ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் அருகேசபர்மதி-ஆக்ரா அதிவிரைவு ரயில் நள்ளிரவில் தடம்புரண்டது. இதனால் பயணிகள் அலறினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்தில், ரயிலின் 4 பெட்டிகள், தடம் புரண்டது. இதில் சிலருக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டதாகவும், அவர்களுக்கு முததலுதவி வழங்கப்பட்ட தாகவும் தகல்வல்கள் தெரிவிக்கின்றன.

சபர்மதி-ஆக்ரா அதிவிரைவு ரயில் அஜ்மீரில் தடம் புரண்டது. ஞாயிறு-திங்கட்கிழமை இடைப்பட்ட இரவில், அதாவது நள்ளிரவு 1மணி அளவில் ராஜஸ்தானின் அஜ்மீரில் உள்ள மதார் ரயில் நிலையம் அருகே சூப்பர் பாஸ்ட் ரயிலின் குறைந்தது நான்கு பெட்டிகள் தடம் புரண்டன. தகவலின்படி, சபர்மதி-ஆக்ரா அதிவிரைவு ரயில் நள்ளிரவு 1 மணியளவில் தடம் புரண்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விசாரணையில், , “மதார் ரயில் நிலையம் அருகே சபர்மதி-ஆக்ரா அதிவிரைவு ரயிலின் இன்ஜினுடன் நான்கு பெட்டிகள் தடம் புரண்டது தெரிய வந்தது. விரைந்த வந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் உயிர் சேதமோ, காயமோ ஏற்படவில்லை.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎஃப்), அரசு ரயில்வே காவல்துறை (ஜிஆர்பி) மற்றும் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் (ஏடிஆர்எம்) மற்றும் மூத்த அதிகாரிகள். இச்சம்பவம் நள்ளிரவு 1 மணியளவில் இடம்பெற்றதாக பயணிகள் தெரிவித்ததாக கூறியதுடன், பயணிகள் தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென பலத்த சத்தம் கேட்டதாகவும், இதனால் ரயில் உடனே நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகளுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவித்தனர். மேலும், மூத்த அதிகாரிகளும் சம்பவ இடத்திலேயே மறுசீரமைப்பு பணிகளை கண்காணித்து வருவதாகவும், இதுதொடர்பாக பொதுமக்கள் தொடர்புகொள்ள 0145-2429642 என்ற உதவி எண்ணையும் அமைத்துள்ளோம்,” என்றும் கூறின ர்.
தடம் புரண்ட பெட்டிகள் மற்றும் இன்ஜினை மீண்டும் பாதையில் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. வடமேற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி (CPRO), கேப்டன் சஷி கிரண் கூறுகையில், இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை, மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
[youtube-feed feed=1]