சபரிமலை பெரிய பாதையின் மகத்துவம் !!!
சபரிமலை ஏறிச்செல்லப் பாரம்பரியமாக மூன்று வழிகள் உண்டு – எருமேலிப் பாதை. வண்டிப்பெரியார் பாதை மற்றும் சாலக்காயம் பாதை.
பெரும்பாலான ஐயப்பன்மார்கள், பெருவழி அதாவது பெரிய பாதை எனப்படும் எருமேலி வழியையே தேர்ந்தெடுத்துப் பயணிப்பார்கள். பெரிய பாதை எனப்படும் வனப்பகுதியே ஐயப்பன் தன் யாத்திரைக்காகச் சென்ற வழி, எனவே அவ்வழியே சென்றாலே யாத்திரை பூர்த்தியாகும் என்று பழமைக்காரர்கள் கூறுவர். இன்னும் ஒருபடி மேலே போய், பெரிய பாதையில் சென்று பதினெட்டாம்படி ஏறினால் மட்டுமே அது சபரி யாத்திரையாகக் கணக்கில் கொள்ளப்படும் என்று கூறும் பழமைக்காரர்களும் உண்டு.
சாட்சாத் பகவான் மணிகண்டன் தன் மனித அவதார காலத்தில் பரிவார கணங்கள் சூழ தங்கிச் சென்ற பாதையாதலால், பெரிய பாதையில் ஒவ்வொரு கல்லுக்கும் தனி மகத்துவம் உண்டு. பண்டைய வழக்கப்படி இந்த பெரிய பாதையில் ஒவ்வொரு முக்கியமான கேந்திரங்களிலும் இருமுடியை இறக்கி வைத்து, அங்குள்ள பூதகணங்களுக்கும், தேவதைகளுக்கும் பூஜைகள் நடத்திய பிறகே புறப்படும் வழக்கம் இருந்தது.
ஒவ்வொரு குன்றும் ஒரு கோட்டை என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு கோட்டையும் ஒரு தேவதையின் காவலில் இருக்கிறது. இதனால் தான் அந்தந்த தேவதையை வணங்கி உத்தரவு பெற்று அங்கிருந்து யாத்திரையைத் தொடர வேண்டும். அவர்களின் காவலை மீறிச் சென்றால் தேவதைகளின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்ற காரணத்தாலேயே பண்டைய குரு ஸ்வாமிகள் இரவில் யாத்திரை செய்வதை அனுமதிப்பதில்லை.
(இன்றும் அந்த விதி பொருந்தும்)
அந்த கேந்திரங்கள் பின் வருமாறு
1. எருமேலி
2.பேரூர் தோடு
3.காளைக்கட்டி ஆஸ்ரமம்
4.அழுதா நதி
5.அழுதா ஏற்றம்
6.கல்லிடம்குன்னு
7.அழுதா இறக்கம்
8. இஞ்சிப்பாறை கோட்டை
9. உடும்பாறை கோட்டை
10.முக்குளி
11.கரிவிலாந்தோடு
12.கரிமலை ஏற்றம்
13.கரிமலை உச்சி
14.கரிமலை இறக்கம்
15.வலியயானை வட்டம்
16.சிரியானை வட்டம் (பம்பா நதி)
17.நீலிமலை ஏற்றம்
18.அப்பாச்சிமேடு Left Side & இப்பாச்சிமேடு Right Side
19.சரம்குத்தி
20.சபரிபீடம்
21.பதினெட்டாம்படி
22.சன்னிதானம்
இனி வரும் பகுதிகளில் ஒவ்வொரு கேந்திரத்தைப் பற்றி அறிந்துக் கொள்வோம்.