பரிமலை

நாளை மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் மண்டல பூஜைகளுக்காக சப்ரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.  அடுத்த நாளான நவம்பர் 16 அதாவது கார்த்திகை மாதம் 1ஆம் தேதி முதல் தினசரி வழக்கமான பூஜைகளுடன் 41 நாட்கள் வழிபாடு நடந்தது.  இதில் கட்டுப்பாடுகளுடன் குறைந்த அளவில் ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ள பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இந்த மாதம் 26 ஆம் தேதி அன்று மண்டல பூஜை முடிவடைந்து கோவில் நடை அடைக்கப்பட்டது.  தற்போது மகர விளக்கு சீசன் ஆரம்பிக்கப்பட உள்ளது. இதையொட்டி நாளை முதல் மீண்டும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது.  நாளை  மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டாலும் அன்று பக்தர்களுக்கு தரிசன அனுமதி கிடையாது.,

நாளை மறுநாள் அதாவது 31 ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்ட பிறகே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.  ஜனவரி 14 ஆம் தேதி மகரவிளக்கு நடைபெற உள்ளது.   நேற்று மாலை 6 மணி முதல் தரிசனத்துக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.  ஜனவரி 19 வரை பக்தர்கள தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.   அதன் பிறகு 20 ஆம் தேதி பந்தள ராஜ குடும்ப பிரதிநிதி தரிசனம் பெற்ற பிறகு ஓவில் நடை அடைக்கப்பட உள்ளது.

வரும் 31 ஆம் தேதி திங்கள் முதல் தினசரி 5000 பக்தர்களுக்கு தரிசன அனுமதி அளிக்கப்படுகிறது.  கொரோனா சோதனை மேற்கொண்டு நெகட்ட்வி சான்றிதழ் உள்ளவர் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.  இம்முறை நிலக்கல், பம்பை ஆகிய இடங்களில் கொரோனா பரிசோதனை நிலையங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.  எனவே பக்தர்கள் கிளம்பும் முன்பே சோதனை செய்துக் கொள்ள வேண்டும் எனக் கேரள அரசு அறிவித்துள்ளது.