கேரள மாநிலத்தின் பிரதான பண்டிகையான ஓணம் பண்டிகை நாளை மறுதினம் (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, அம்மாநிலத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலிலும் சிறப்பு பூஜை நடைபெறும்.
இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக, கோவில்களில் பக்தர்கள் கலந்துகொள்ள கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஓணம் பண்டிகையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப் படுகிறது.
கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல் சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து நாளை உத்ராட சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
இந்ததகவலை திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.