சந்தானம் நடிப்பில் காமெடி-குடும்ப சென்டிமென்ட் கலந்து உருவாகியுள்ள ‘சபாபதி’ திரைப்படத்தை ஆர் கே என்டர்டெயின்மென்ட் சார்பில் சி ரமேஷ் குமார் தயாரிக்க, ஆர் ஸ்ரீநிவாச ராவ் இயக்கியுள்ளார்.

எம் எஸ் பாஸ்கர், பிரீதி வர்மா, சாயாஜி ஷிண்டே, ‘விஜய் டிவி’ புகழ், சுவாமிநாதன், ‘காமெடி பஜார்’ மாறன் உள்ளிட்டோர் ‘சபாபதி’ படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவை பாஸ்கர் ஆறுமுகம் கவனிக்க, படத்தொகுப்பை லியோ ஜான் பால் கையாண்டுள்ளார்.

சாம் சி எஸ் இசையில் உருவாகியுள்ள ‘சபாபதி’-யின் சண்டைக் காட்சிகளை ஹரி தினேஷ் வடிவமைத்துள்ளார்.

இத்திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கலர்ஸ் டிவி வாங்கியுள்ளது.

இந்நிலையில், படம் ஓடிடியில் வெளியாகலாம் என வதந்தி கிளம்பியது. அதற்கு பதில் சொல்லும் வகையில் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டனர். இதில், படத்தின் ட்ரெய்லர் 10-ஆம் தேதி நாளை வெளியாகும் என குறிப்பிட்டுள்ளனர். அதேபோல் நவம்பர் 19-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

 

[youtube-feed feed=1]