மாஸ்கோ

னது முன்னாள் காதலியைக்   கொடூரமாகக் கொலை செய்தவனுக்கு ரஷ்ய அதிபர் விடுதலை அளித்துள்ளார்.

ரஷ்யாவில் 23 வயதான வேரா பெக்டெலேவா என்ற பெண், தனது காதலன் விளாடிஸ்லாவ் கன்யூஸ் என்பவருடனான உறவை முறித்துக் கொண்டுள்ளார். அதில் ஏற்பட்ட பிரச்சினையில் கன்யூஸ் வேராவை கொடூரமாக கொலை செய்துள்ளான். அவரை மூன்றரை மணி நேரம் பாலியல் பலாத்காரம் செய்து சித்ரவதை செய்ததுடன், 111 முறை மீண்டும் மீண்டும் கத்தியால் குத்தியும், இரும்பு கேபிள் மூலம் கழுத்தை இறுக்கியும் கொன்றுள்ளான்.

அக்கம் பக்கத்தினர் 7 முறை காவல்துறைக்கு போன் செய்தும், பதில் வரவில்லை. சம்பவ இடத்திற்குக் காவலர்கள் வந்தபோது வேரா இறந்து கிடந்துள்ளார். காவலர்கள் கன்யூசை கைது செய்து இந்த வழக்கு விசாரணையில், கன்யூஸ்க்கு குறைந்தபட்ச தண்டனையாக 17 வருட சிறை தண்டனை கிடைத்தது.

தற்போது குற்றவாளி கன்யூஸ் உக்ரைன் போரில் ஈடுபட முடிவு செய்ததை அடுத்து, ரஷ்ய அதிபர் புதின் அவனை கருணை அடிப்படையில் விடுதலை செய்தார். அவன் மொத்த தண்டனைக் காலமான 17 வருட காலத்தில் இன்னும் 1 வருடம் கூட நிறைவு செய்யாத நிலையில், அவனை அதிபர் விடுவித்துள்ளனர்.

வேராவின் தாயார் ஒக்ஸானா தன் மகளைக் கொன்ற கொலையாளியை மன்னித்த புதின மீது குற்றம் சாட்டினார்.

சிறை அதிகாரிகள் உக்ரைன் எல்லையில் உள்ள தெற்கு ரஷ்யாவில் அமைந்துள்ள ரோஸ்டோவுக்கு கன்யூஸ் மாற்றப்பட்டதை உறுதி செய்ததாகப் பெண்கள் உரிமை ஆர்வலர் அலியோனா போபோவா புதன்கிழமை தெரிவித்தார். நவம்பர் 3 என தேதியிடப்பட்ட அரசு தலைமை வழக்கறிஞர் அலுவலக கடிதத்தையும் பகிர்ந்தார். அதில், கன்யூஸ்-க்கு மன்னிப்பு வழங்கப்பட்டதாகவும், அவரது தண்டனை ஏப்ரல் 27 அன்று அதிபரின் ஆணை மூலம் நீக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதிபரின் இந்த செய்கை ரஷ்யாவை மட்டுமின்றி பல உலக நாடுகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.