மாஸ்கோ,

இந்திய தேர்தலில் பயன்படுத்தப்பட்டு வரும் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் (இவிஎம்) தொழில்நுட்பத்தை ரஷ்ய அதிபர் தேர்தலில் பயன்படுத்த விளாடிமின் புதின் முடிவு செய்துள்ளார்.

ந்தியாவில் தற்போது எலக்ட்ரானிக் இயந்திர மூலமே  ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதுபோன்று ரஷ்யாவிலும் எலக்ட்ரானிக் இயந்திரம் மூலம் ஓட்டுப்பதிவு செய்ய ரஷ்யா விரும்புகிறது. அடுத்த ஆண்டு (2018)  நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் இவிஎம் மூலம் ஓட்டுப்பதிவு செய்ய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த மாதம் நடைபெற்ற  ஐந்து மாநில தேர்தலிலும் இவிஎம் உபயோகப்படுத்தப்பட்டு, அதற்கான தேர்தல் முடிவுகளையும் எளிதாக அறிவித்தது.

இதேபோல் ரஷ்யாவிலும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் இவிஎம் தொழில்நுட்பத்தின்மூலம் வாக்குப்பதிவு செய்ய ரஷ்யா ஆர்வமாக இருப்பதாக கூறி உள்ளது.

இந்தியாவின் வளர்ச்சிக்கு ஏற்ப இந்த இவிஎம் இயந்திரங்களின் செயல்பாடுகள் இருப்பதாகவும, அதைனால், ரஷ்யாவிலும் மாநில வாரியாக வாக்குப்பதிவு நடத்த இந்திய அதிகாரிகள் உதவி தேவை எனவும் கூறியுள்ளது.

ரஷியன் தேர்தல் கமிஷன் துணை தலைவர் நிகோலாய் லெவிசெவ், நடைபெற்ற  உத்தரகண்ட் சட்டமன்ற தேர்தலில் போது வாக்குப் பதிவை தனது நாட்டு மூத்த அதிகாரிகளுடன் பார்வை யிட்டு வியந்ததார். பொதுமக்கள் இயந்திரங்கள் மூலம் வாக்களித்தைதை பார்த்ததின் மூலம் நல்ல அனுபவம் கிடைத்துள்ளது என்றும் கூறினார்.

பின்னர் இதுகுறித்து, டில்லியில் சம்பந்தப்பட்ட  அமைச்சக அதிகாரிகளுடன்  விரிவான ஆலோசனை நடத்தினார்.

அப்போது, ரஷியாவில் இவிஎம் வாக்குப்பதிவுக்கு தேவையான முழு ஒத்துழைப்பு மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர தொழில்நுட்பம், அதற்கான டிரெயினிங் போன்றது குறித்து ஆலோசனை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

ரஷியன் தேர்தல் கமிஷன் துணை தலைவர் நிகோலாய் லெவிசெவ், இந்தியாவில் நடைபெற்ற 5 மாநில சட்டசபை தேர்தலின் நடைமுறையால் தான் பெரிதும் ஈர்க்கப்பட்டதாகவும், ரஷிய தேர்தலில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.

ஏற்கனவே 2014ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற அதிபர் தேர்தலின்போது, இந்தியாவின் இவிஎம் உபயோகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.