உக்ரைன் நாட்டில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளை நடத்த ரஷ்யா தயாராக உள்ளது.
ரஷ்ய தயாரிப்பான ஸ்பூட்னிக் உடன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆஸ்ட்ராஜெனிகா உருவாக்கிய தடுப்பூசி ஆகிய இரண்டையும் இணைத்து பரிசோதிக்க முடிவு செய்துள்ளது.
இந்த தகவலை ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் (ஆர்.டி.ஐ.எஃப்) தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இதன் மூலம் ஆஸ்ட்ராஜெனிகா தாயாரித்துள்ள தடுப்பூசியின் செயல்திறனை அதிகரிக்க முடியுமா என்பது பரிசோதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
ரஷ்யாவின் தன்னாட்சி அமைப்புகளில் ஒன்றான ஆர்.டி.ஐ.எஃப், ஸ்பூட்னிக் தடுப்பூசியை வெளிநாடுகளில் விற்பனை செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.