ஒரு  நாட்டின் ஒரு டஜன் வீரர்கள்  ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டால் என்ன செய்யமுடியும்.? அவர்களுக்காக தனியாய் ஒரு போட்டியை நடத்த வேண்டியது தான். அதைத் தான் ரஸ்யாவும் செய்துள்ளது.
வியாழக்கிழமை மாஸ்கோவில் ரஸ்யா சிறப்புப் போட்டிகளை நடத்தியது. தங்கள் நாட்டு வீரர்கள் பெருமளவில் ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டதால் அவர்களுக்காக இந்த சிறப்புப் போட்டிகளை ரஸ்யா நடத்த தீர்மானித்தது.
Athletics - 58th Brothers Znamensky Memorial track and field meeting - Men's 110m hurdles - Meteor Stadium, Zhukovsky, Russia, 4/6/16. Philipp Shabanov, Sergey Shubenkov and Konstantin Shabanov of Russia competes. REUTERS/Sergei Karpukhin - RTSG456
ரஸ்ய அரசே தன்னுடைய வீரர்கள் ஊக்க போதை மருந்துகள் உட்கொண்டு போட்டிகளில் பங்கேற்க உறுதுணையாக இருந்ததை ஜூன் மாதம்  உலக போதை தடுப்பு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். குறிப்பாக 2011 மற்றும் 2015 ஆண்டுகளில் கோடை மற்றும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோதிக்கப்பட்ட வீரர்களின் சிறுநீர் மாதிரிகளை மீண்டும் சோதனை செய்ததில் இந்த உண்மை  கண்டுபிடிக்கப்பட்டது.
இதில்   110 மீட்டர் ஓட்டப் பந்தய நடப்பு  உலக சாம்பியன் ரேசர் செர்ஜி ஷூபெங்கோவ்  அடங்குவார்; உயரம் தாண்டும் வீரர்கள் மரியா  குச்சினா , ஒலிம்பிக் சாம்பியன் இவான் உக்கோவ் மற்றும் டேனியல் சைப்ளாகோவ் ,  ஈட்டி  வீசும் வீரர்கள்  டிமிட்ரி தரபின் மற்றும் வேரா ரேபிரிக்;டிரிபிள் ஜம்ப் வீரர் ஏகடெரினா கோனேவா  ஆகியோர் அடங்குவர்.
ஒலிம்பிக் அதிகாரிகளால் ரியோ ஒலிம்பிக்கில் பங்கற்பதிலிருந்து இதுவரை பதிமூன்று ரஷிய விளையாட்டு வீரர்கள் தடை செய்யப்பட்டுள்ளனர் என உறுதி படுத்தப்பட்டுள்ளது.
அதில் ஏழு நீச்சல், இரண்டு பளுதூக்கும் வீரர்கள், மூன்று ரோயர்கள், மற்றும் ஒரு மல்யுத்த வீரர் அடங்கும்.
நீச்சல்வீரர்களில் ஒருவரான யூலியா எஃபிமோவா தன்மீதான தடையை நீக்கப்கோரி முறையீடு செய்யவுள்ளதாகக் கூறினார்.
வியாழக்கிழமை மாஸ்கோவில் நடைபெறவுள்ள சிறப்பு போட்டியில் ஜூன் மாதம் தடைசெய்யப்பட்டு முறையிட்டு நிராகரிக்கப்பட்ட 68 விளையாட்டு வீரர்கள் மத்தியில்
ஷூபெங்கோவ், குச்சினா மற்றும் உக்கோவ் ஆகிய தடகள வீரர்களும் அடங்குவர்.