மாஸ்கோ:

ஷ்யாவில் விமான ஓடு பாதையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக  விமானத்தின் எரிபொருள் டேங்க் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 41 பேர் பலியாகி உள்ளனர்.

‘ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஷ்ரேமெட்யோவ் விமான நிலையத்தில் ஏரோபோல் சுகோய் சூப்பர் ஜெட் வகை  பயணிகள் விமானம் ஓடு பாதையில் சென்றபோது திடீரென தீ பிடித்து எரிந்தது. இதில், 78 பேர் பயணம் செய்த பயணம் செய்த பயணிகளில் 41 பேர் உடல்கருகி பலியானார்கள். மற்றவர்கள் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இந்த  விமானம் மாஸ்கோவில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் தொழில்நுட்ப பிரச்சினை ஏற்பட்டதால், உடடினயாக திருப்பப்பட்டு  மாஸ்கோ நோக்கி வந்தது. ஷ்ரேமெட்யோவ் விமான நிலையத்தில் எமர்ஜென்சி லேண்டிங் செய்ய முயன்றது. ஆனால் முடியவில்லை .

தொடர்ந்த விமானி விமானத்தை தரையிறக்க முயற்சி செய்து வந்தார்.  முதல்முறை லேண்ட் செய்ய முயன்ற போது லேண்ட் செய்ய முடியவில்லை. இதனால் இரண்டாவது முறை கஷ்டப்பட்டு விமானத்தை தரையிறக்கியபோது, விமானத்தின் எரிபொருள் டேங்க் வெடித்து தீ பிடித்தது.  தீயுடன் விமானத்தின் ஒரு பக்கம் ஓடுதளத்தில் உரசிக்கொண்டே சென்றபோது, விமானத்தின்  இறக்கை உடைந்து சிதறியது. உள்ளே பயணிகள் அலறல் வெளியே கேட்டது.

இந்த விமானத்தில் 78 பேர் பயணம் செய்தார்கள். இந்த விபத்தில் 41 உடல்கருகி பலியானதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில 37 பேர் படுக்காயம் அடைந்துள்ளனர்.

அவர்கள் தற்போது அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து எப்படி நடந்தது என்று விசாரிக்கப்பட்டு வருகிறது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது

விமானம் தீப்பிடித்து எரியும் காட்சி…