மாஸ்கோ: உக்ரைனின் கீவ், கார்கிவ், மரியுபோல், சுமி உள்பட சில நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தம் செய்வதாக ரஷ்யா மீண்டும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனின் கோரிக்கையை ஏற்று தற்காலிக போர்நிறுத்தம் அறிவிக்கப்படுவதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர்த் தாக்குதல் இன்று 12வது நாளாக தொடர்ந்து வருகிறது. இந்த போரினால் இரு தரப்புக்கும் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், போரில் சிக்கி அப்பாவி மக்களும் தங்களது உயிர்களை இழந்து வருகின்றனர். இதனால், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் வகையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர் பத்திரமாக வெளியேறும் வகையிலும் போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும் என இந்தியதா பல நாடுகள் அறிவுறுத்தி வந்தன.

இதையடுத்து கடந்த வாரம் சில மணி நேரங்கள் போர் நிறுத்தம் அறிவித்தார் ரஷ்ய அதிபர் புதின். ஆனால், சுமி, கீவ் உள்பட பல நகரங்களில் சிக்கிய இந்தியர்கள் உள்பட வெளிநாட்டவர் அங்கிருந்து வெளியேறுவதில் சிக்கல் நீடித்து வந்தது.

இதையடு;தது, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரனின் வெளிநாட்டினர் வெளியேறும் வகையில் மீண்டும் போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும் என ரஷ்ய அதிபர் புதினுக்கு கோரிக்கை விடுத்து. இதை ஏற்று தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்படுவதாக ஷ்ய அதிபர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, உக்ரைனின் தலைநகர் கீவ் மற்றும் மற்ற மூன்று நகரங்களான மரியுபோல், கார்கிவ் மற்றும் சுமி ஆகியவற்றில் ரஷ்யா போர் நிறுத்தத்தை அறிவித்தது. போர் நிறுத்தம் மாஸ்கோ நேரப்படி காலை 10 மணிக்கு (ஐஎஸ்டி மதியம் 12.30 மணிக்கு) அமலுக்கு வரும். நான்கு உக்ரைன் நகரங்களில் இருந்து பொதுமக்களை வெளியேற்ற அனுமதிக்கும் வகையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் பல மனிதாபிமான தாழ்வாரங்களை திறப்பதாக ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது.