கிவ்

க்ரைன் தலைநகரான கிவ் நகரில் பல இடங்களில் தாக்குதல் நடத்தப்போவதாக ரஷ்யா ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்ய ராணுவப்படைகள் தொடர்ந்து 6 நாட்களாகப் போர் தொடுத்து வருகிறது.   ரஷ்யப்படைகள் உக்ரைன் நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களையும் தனது வான் வழித் தாக்குதல் அடியோடு அழித்துள்ளதால தற்போது உக்ரைனுக்கு விமான போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது.

உக்ரைன் நாட்டில் உள்ள கார்கில் நகரில் ரஷ்ய படைகளின் குண்டு வீச்சு தாக்குதலால் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.   அடுத்தாக உக்ரைன் நாட்டின் தலைநகரமான கிவ் நகரில் தாக்குதல் அதிகரிக்கும் என்பதால் இந்தியர்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் ரஷ்ய ராணுவ அமைச்சகம் ஒரு எச்ஸ்ரீக்கை விடுத்துள்ளது.   ரஷ்யப் படைகள் கிவ் நகரில் பல முக்கிய இடங்களை இலக்கு வைத்துத் தாக்க உள்ளதாகவும் அதில் ஒரு தாக்குதல் நகரின் முக்கிய இடத்தில் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.  இதை ரஷ்ய நிறுவனங்களான டாஸ் மற்றும் ரியா உறுதி செய்துள்ளது.