கிவ்
உக்ரைனின் தலைநகரில் ரஷ்யப்படைகள் நடத்தி வரும் தாக்குதலில் தொலைக்காட்சி கோபுரம் தாக்கப்பட்டுள்ளது.
சென்ற வியாழக்கிழமை முதல் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துத் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. முதலில் உக்ரைனில் உள்ள விமான நிலையங்கள், ராணுவ முகாம்கள் ரஷ்யப்படைகளால் குறி வைக்கப்பட்டன. நேற்று ரஷ்ய பாதுகாப்புப் படை உக்ரைன் தலைநகரில் உள்ள பல இடங்கள் குறி வைத்து அழிக்கப்படும் என அறிவித்தது..
கிவ் நகருக்கு சுமார் 65 கிமீ தொலைவில் முகாமிட்டுள்ள ரஷ்ய ராணுவம் அந்நகரைக் கைப்பற்றத் திட்டமிட்டுத் தாக்குதல்கள் நடத்தி வருகின்றது. ஆனால் உக்ரைன் நாட்டு ராணுவம் அவர்களை முன்னேர விடாமல் தடுக்கின்றது. இதை அடுத்து உக்ரைன் நாட்டில் உள்ள அனைத்து பெரிய நகரங்களையும் கைப்பற்ற ரஷ்யா திட்டமிட்டுள்ளது.
தற்போது கிவ் நகரில் உள்ள பல முக்கிய இடங்களில் ரஷ்யப்படை தாக்குதல் நடத்தி வருகிறது இதில் ஒன்றாக உக்ரைன் நாட்டி தொலைக்காட்சி கோபுரம் ரஷ்ய ராணுவ வீரர்கள் கடும் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் தொலைக்காட்சி நிறுவனத்தின் கருவிகள் நாசமடைந்துள்ளன. இதனால் நீண்ட காலத்துக்குத் தொலைக்காட்சி சேனல் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.