சென்னை:

ரகப் பகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தல் திமுக முன்னிலை வகித்து வரும் நிலையில், சேலம் மாவட்டத்தில் தேர்தல் முடிவுகளை அறிவிக்காமல், தேர்தல் ஆணையம் காலம் தாழ்த்தி வருகிறது. இதை கண்டித்து, வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்கக்கோரி திமுகவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஊரகப்பகுதிகளில் 2 கட்டங்களை நடைபெற்ற ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் வாக்கு எண்ணிகை இன்று நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி பெற்று முன்னிலையில் வகித்து வருகிறது.

இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டமான சேலத்திலும் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.  ஆனால், தேர்தல் முடிவுகளை  தேர்தல் அதிகாரிகள்   வெளியிடாமல் உள்ளனர்.

இதற்கு திமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  சேலம் மாவட்ட எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன் இதுகுறித்து புகார் கூறியுருந்தார். மேலும், திமுக தலைவர் ஸ்டாலினும், மாநில தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்து நடவடிக்கை எடுக்ககோரி புகார் கொடுத்தார்.

இருந்தாலும், சேலத்தின் பகுதிகளில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படாமல் உள்ளது. இதை கண்டித்து, திமுக எம்.பி. பார்த்திபன் உள்பட திமுகவினர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்..

சேலத்தில் எம்.பி பார்த்திபன் தலைமையில்  தேர்தல் முடிவுகளை அறிவிக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதுபோல,  திருச்சி மணப்பாறை ஒன்றியத்தில் வாக்கு எண்ணிக்கை முறைகேடை கண்டித்து திமுகவினர்  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை முடிந்தும் வெற்றியை அறிவிக்காத‌தால் திமுகவினர் மாநிலத்தின் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.