மதுரை:

ரக உள்ளாட்சி தேர்தலில் நாமக்கல் பகுதியில்  திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை ரியா வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு  கடந்த மாதம்  27, 30-ந்தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெற்றன. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. ஓட்டுகளை எண்ணும் பணியில் சுமார் 2 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர்.

ரியா வேட்புமனுத் தாக்கல் செய்தபோது…

இந்த தேர்தலில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியம் இரண்டாவது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு, தி.மு.க மாவட்ட கழகத்தால் திருநங்கை ரியா தேர்வு செய்யப்பட்டார். அவர்  திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் பரமசிவனிடம் அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

அப்போது கூறிய ரியா,  , “முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் திருநங்கை/திருநம்பிகளுக்கு பல்வேறு அங்கீகாரங்களை அளித்தார். அவரது வழிதொட்டு, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருநங்கையான எனக்கு சீட் கொடுத்துள்ளார். நான் வெற்றி பெற்றால், எந்தப் பாகுபாடுமின்றி வார்டு மக்களுக்காக பணியாற்றுவேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ரியாக அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.