சென்னை:  9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்துவருகிறது என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தெரிவித்து உள்ளார். காலை 9 மணி வரை 7.72% வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

9 மாவட்டங்களில், மாவட்ட ஊராட்சி உறுப்பினா், ஒன்றியக் குழு உறுப்பினா், ஊராட்சித் தலைவா் மற்றும் ஊராட்சி வாா்டு உறுப்பினா் என மொத்தம் உள்ள 14 ஆயிரத்து 573 வாக்குச்சாவடிகளில் முதல்கட்டமாக,. 7, 921 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

காலை 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், விறுவிறுப்பான வாக்குப்பதிவுகள்  நடைபெற்று வருகிறது. சில இடங்களில் சில இடங்களில் மழை மற்றும், கட்சியினர்களுக்கு இடையேயான மோதல், தேர்தல் புறக்கணிப்பு போன்ற சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.

இந்த நிலையில் செய்தியளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார். தேர்தலையொட்டி,  129 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு முதற்கட்ட வாக்குப்பதிவு கண்காணிக்கப்படுகிறது என்றும்,  12,318 வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

மக்கள் விறுவிறுப்பாக வாக்குகளை செலுத்தி வருவதாக தெரிவித்தவர் காலை 9 மணி வரை 7.72% வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.