சர்வதேச பங்கு சந்தைகள் அழுத்தத்தில் காணப்படும் நிலையில், இந்திய பங்கு சந்தையில் பலத்த சரிவில் காணப்படுகின்றது. குறிப்பாக தொடர்ச்சியாக 4வது நாளாக சரிவில் காணப்படுகின்றது. கடந்த அமர்வில் 80.99 ரூபாயாக முடிவடைந்திருந்த ரூபாயின் மதிப்பானது, இன்று 81.55 ரூபாயாக தொடங்கிய நிலையில், அது தற்போது 81.52 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகிறது. இது மேலும் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாட்டுச் சந்தையில் அமெரிக்க கரன்சியின் வலிமை, உள்நாட்டு பங்குகளின் முடக்கம், நிலையான கச்சா எண்ணெய் விலை ஆகியவையும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 9 வர்த்தக அமர்வுகளில் 8 அமர்வில் ரூபாயின் மதிப்பானது 2.28% சரிவில் காணப்படுகின்றது. இதற்கிடையில் இந்திய ரிசர்வ் வங்கியும் வரவிருக்கும் கூட்டத்தில் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது பின்னர் சந்தைக்கு சாதகமாக அமையலாம் என்றாலும், தற்போதைக்கு முதலீடுகள் வெளியேறவே ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் முடிவு வழிவகுக்கலாம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இன்று நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 41 காசு குறைந்து 81.50 என்ற அளவில் வீழ்ச்சியடைந்தது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 725 புள்ளிகள் சரிந்து 57,372 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 243 புள்ளிகள் சரிந்து 17,083 புள்ளிகளிலும் வர்த்தகமாகிறது.