டில்லி:
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற திடீர் அறிவிப்பால், கையில் பணம் இருந்தும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள். செல்லுபடியாகும் நோட்டுக்களை வங்கி மற்றும் அஞ்சலகங்களில் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டாலும், உரிய முன்னேற்பாடுகள் செய்யப்படாததால் பலரும் இன்னும் பணம் எடுக்க முடியாத நிலை. பெரும்பாலான ஏ.டி.எம்.கள் இன்னமும் செயல்பட வில்லை.
இந்த நிலையில் வெகுண்ட மக்கள், பொருட்களை சூறையாடும் சம்பவம் ஆங்காங்கே நிகந்துவருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ம.பி. மாநநிலத்தில் ரேசன் கடை சூறையாடப்பட்ட சம்பவமும் சமீபத்தில் நடந்தது.
இந்த நிலையில் டில்லியில் பெரும்பாலான ஏடிஎம் மையங்கள் செயல்படாததால் பொறுமையிழந்த மக்கள் மெட்ரோ மாலில் வலுக்கட்டாயமாக நுழைந்து உணவுப்பொருட்களை அள்ளிச்சென்றனர்.
கேரளாவிலும் இது போன்ற சம்பவம் நடந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வீடியோ:
https://www.youtube.com/watch?v=LFeaeCZXI6c&feature=youtu.be
\