டெல்லி: டெல்லி மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தது. மொத்தம் 250 வார்டுகளில், ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி 134 இடங்களில் வெற்றி பெற்று மாநகராட்சியை முழுமையாக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. பாஜக 104 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும், சுயேட்சை 3 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஏற்கனவே மூன்று முறை மாநகராட்சியை கைப்பற்றிய பாஜக இந்த முறை தோல்வியை சந்தித்துள்ளது.

‘வெற்றி குறித்து கூறிய மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,  டெல்லியில் பணியாற்ற பாஜக மற்றும் காங்கிரஸின் ஒத்துழைப்பை நான் விரும்புகிறேன். நான் மத்திய அரசிடம் முறையிட்டு, டெல்லியை சிறப்பாக மாற்ற பிரதமரின் ஆசியை வேண்டுகிறேன். எம்சிடியை ஊழலற்றதாக மாற்ற வேண்டும். இன்று, டெல்லி மக்கள் ஒட்டுமொத்த தேசத்திற்கும் ஒரு செய்தியை வழங்கியுள்ளனர் என்று கூறினார்.

டெல்லி மாநில அரவிந்த் கெஜிர்வால் முதல்வராக உள்ளார். எதிர்க்கட்சியாக பாஜக உள்ளது. டெல்லியில் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு இல்லாத நிலையே உள்ளது. இருந்தாலும் மாநகராட்சி தேர்தலில் மும்முனை போட்டி நிலவியது. ஆளும் கட்சியான ஆம் ஆத்மி கட்சி இந்த மாநகராட்சித் தேர்தலில் அதிக இடங்களைப் பெற்று தனது பலத்தினை நிரூபிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.  அதுபோல கருத்துக்கணிப்புகளும் வந்தன.

இநத் நிலையில்தான், அங்குள்ள  250 வார்டுகளுக்கும் தேர்தல் நடைபெற்றன. இந்த வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே ஆம்ஆத்மி அதிக இடங்களில் முன்னிலை வகித்து வந்தது. இறுதியாக இன்று பிற்பகல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து வெற்றி பெற்றவர்கள் குறித்த இறுதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி ஆம் ஆத்மி 134 இடங்களில் வெற்றி பெற்று மாநகராட்சியை முழுமையாக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. பாஜக 104 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும், சுயேட்சை 3 இடங்களிலும் வெற்றி பெற்றன. 15 ஆண்டுகளாக தொடர்ந்து டெல்லி மாநகராட்சியை ஆட்சி செய்து வந்த பாஜக  104 இடங்களையும் கைப்பற்றி எதிர்க்கட்சி வரிசையில் அமர்கறிது.

ஏற்கனவே மூன்று முறை மாநகராட்சியை கைப்பற்றிய பாரதிய ஜனதா இந்த முறை ஆம்ஆத்மியிடம் மாநகராட்சியை பறிகொடுத்துள்ளது.