சென்னை: தமிழ்நாட்டில் குடிநீர் தொட்டிகளில் அசிங்கம் கலக்கப்படுவது தொடர்ந்துகொண்டிருக்கிறது.  தற்போது,  காஞ்சிபுரம் அருகே பள்ளி மாணவர்கள் அருந்தும்  குடிநீர் தொட்டியில் அழுகிய நாய் சடலம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இது ஆட்சியாளர்களின் மெத்தனத்தை பிரதிபலித்துள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் சீனிவாசா மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியானது காஞ்சிபுரம் பேருந்து நிலையம்  அமைந்துள்ளது. இதனால்,  காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள பல  கிராமங்களில் இருந்து அதிக மாணவர்கள் பயின்று வருகின்றனர்.  சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் பயின்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த பள்ளியில் பொங்கல் விடுமுறை கழிந்து பள்ளிக்கு வந்த மாணவர்கள், குடிநீர் தொட்டியில் பிடிக்கப்பட்ட தண்ணீரில் இருந்து துர்நாற்றம் வந்ததால், அதிர்ச்சி அடைந்து பள்ளி ஆசிரியர்களிடம் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து, இதுகுறித்து, ஆய்வு செய்த பள்ளி தலைமை ஆசிரியர் தண்ணீர் தேக்கி வைத்திருந்த சம்ப்-ல் இருந்து துர்நாற்றம் வருவதை கண்டறிந்தனர்.

இதையடுத்து,  பள்ளி தலைமை ஆசிரியர் உடனடியாக மாநகராட்சி அதிகாரிக்கு தெரியப்படுத்தினர். அவர்கள் சம்பினுள் இறங்கி பார்த்தபோது, அதில் நாய் ஒன்று இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து,  இறந்து கிடந்த நாயினை அப்புறப்படுத்தி தொட்டியினை சுத்தம் செய்து உள்ளார்.

இது குறித்து காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் செந்தில் செந்தில் முருகன்  தரப்பிலும், பள்ளி தலைமை ஆசிரியர் தரப்பிலும் காவல்துறையில் புகார்கள் அளிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்தபோது இதுபோன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2022ம் ஆண்டு டிசம்பரில் புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் அருகே பட்டியலின மக்கள் வாழும் பகுதியில் உள்ள குடிநீர் தேக்க தொட்டியில் அடையாளம் தெரியாத விஷமிகள் மலம் கலந்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொடுஞ்செயலை செய்த குற்றவாளிகள் இன்றுவரை  கைது செய்யப்பட்டவில்லை. இது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதைத்தொடர்ந்து, 2023 நவம்பர் காஞ்சிபுரம் மாவட்டடம் திருவந்தவார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், கடந்த 21ஆம் தேதி அன்று வழக்கம் போல, பள்ளி செயல்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது மாணவர்கள் சிலர் குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் பிடித்து குடித்துள்ளனர். அப்போது தண்ணீரில் இருந்து துர்நாற்றம் வீசவே இதுகுறித்து மாணவர்கள், ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளனர். பின்னர் அந்த  குடிநீர் தொட்டியை அவசரமாக இடித்துள்ள மாவட்ட நிர்வாகம் மலம் கலக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. மேலும், புதிய விளக்கம் ஒன்றையும் அளித்தது சர்ச்சையானது.

இந்த நிலையில், தற்போது பள்ளி குடிநீர் தொட்டியில் நாய் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வதற்கு, ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் மெத்தனம் என குற்றம் சாட்டும் பொதுமக்கள், அரசியல் அவலங்களை எடுத்துரைக்கும் எதிர்க்கட்சியினர்மீதும், ஊடகங்கள் மீதும் இரவோடு இரவாக நடவடிக்கை எடுக்கும் திமுக அரசு, இதுபோனற் சம்பவங்களில் கவனம் செலுத்துவது நல்லது.  இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.