மோகன்.ஜி இயக்கத்தில் ரிஷி ரிச்சர்ட், ஷீலா நடிப்பில் வெளியான படம் ‘திரெளபதி’. இந்தப் படத்தின் ட்ரெய்லர் உருவாக்கிய சர்ச்சையால், பெரும் எதிர்பார்ப்பு உருவானது.

இந்நிலையில் நேற்று (டிசம்பர் 4) சென்னையில் ‘ருத்ர தாண்டவம்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ‘திரெளபதி’ படத்தைத் தயாரித்த ஜி.எம். பிலிம் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் ஒட்டுமொத்த உரிமையை 7ஜி ஃபிலிம்ஸ் சிவா கைப்பற்றியுள்ளார்.

அதில் ரிஷி ரிச்சர்ட், தர்ஷா குப்தா, தம்பி ராமையா, விக்கி உள்ளிட்ட பலர் இதில் நடித்து வருகிறார்கள்.

ஒளிப்பதிவாளராக ஃபரூக், இசையமைப்பாளராக ஜூபின் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்து, கோடை விடுமுறைக்கு வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.