மோகன்.ஜி இயக்கத்தில் ‘ருத்ர தாண்டவம்’ படத்தில் ரிஷி ரிச்சர்ட், தர்ஷா குப்தா, தம்பி ராமையா, விக்கி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

காதலர் தினத்தை முன்னிட்டு ‘ருத்ர தாண்டவம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. மாலை 6 மணிக்கு அடுத்த முக்கியமான அறிவிப்பு என்று படக்குழு தெரிவித்தது.

அதன்படி ‘ருத்ர தாண்டவம்’ படத்தின் வில்லனாக இயக்குநர் கெளதம் மேனன் நடிக்கவுள்ளதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. அவர் வாதாபிராஜன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக இயக்குநர் மோகன்.ஜி தெரிவித்திருந்தார்.

ஒளிப்பதிவாளராக ஃபரூக், இசையமைப்பாளராக ஜூபின் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். ‘திரெளபதி’ படத்தைத் தயாரித்த ஜி.எம். பிலிம் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒட்டுமொத்த உரிமையை 7ஜி ஃபிலிம்ஸ் சிவா கைப்பற்றியுள்ளார்.

ருத்ர தாண்டவம் படத்திற்கான தனது பகுதிகளை முடித்துக் கொடுத்த தர்ஷா, படத்தில் தனது சொந்த குரலில் டப்பிங்கும் பேசியுள்ளார்.

தற்போது அனைத்து பணிகளும் முடிந்து படத்தை சென்சாருக்கு அனுப்பி இருக்கிறார்கள். இந்த படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் ஒரு சில கட்டுகளுடன் படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். விரைவில் படத்தின் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.