ருத்ராட்சம் அணிவதால் கடவுளின் கருணை கிட்டுமா?
சர்வ நிச்சயமாக அவன் அருளாலே அவன் தாள் வணங்கி இறைவன் சிவபெருமான் கருணை செய்தால்தான் அவருடைய நாமத்தைக்கூட
ஓம் நமசிவாய நம்மால் சொல்ல முடியும்.
அப்படியிருக்க நாம் பிறவிப்பயன் அடைய வேண்டி நமக்காக ருத்ராட்சத்தை அளித்துள்ளாரே அதனால் திருநீறு தரித்தல், ருத்ராட்சம் அணிதல், பஞ்சாட்சர மந்திரம் உச்சரித்தல் இம்மூன்றும் ஒருவர் ஒரு சேரச் செய்து வந்தால் முக்தி எனும் மஹா பேரானந்தத்தை அடைவது உறுதி இம்மூன்றும் இந்து தர்மங்கள், தர்மத்தை விடாதவர்களை இறைவன் கைவிடமாட்டார். மேலும் நவகிரஹங்கள் (ஏழரைச் சனி, அஷ்டமச்சனி, ராகு-கேது) நமக்கு நன்மையே செய்யும் தோஷத்தின் தாக்கங்கள் குறையும்.
ருத்ராட்சம் அணிந்திருக்கும் வேளையில் ஒருவர் உயிர் பிரிந்தால் அவர்கள் சிவபெருமானின் திருவடியையே அடைவார்கள் நற்கதி முக்தி எற்படும்.
பேய், பிசாசு, பில்லி, சூனியம், மந்திரம், தந்திரம், எந்திரம் இவை அனைத்தும் ருத்ராட்சம் கழுத்தில் அணிந்திருப்பவர்களை ஒன்றுமே செய்யமுடியாது. மாறாக அவர்களுக்கு நன்மையே செய்யும் ஆகையால் ஒவ்வொருவரும் பயம் கொள்ளாமல் கண்டிப்பாக ருத்ராட்சம் அணியலாம்.
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே.
இத்தனை மேன்மைகள் இருந்தும் சிலர் திருநீறு, ருத்ராட்சம் அணியத் தயங்குகிறார்களே?
உலகில் மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் அவர்களின் மத சின்னங்களை அணிய வெட்கப்படுவதில்லை. நாம் நமது மதச் சின்னங்களாகிய விபூதி, ருத்ராட்சம் மற்றும் நமசிவாய என்ற நாம ஜபம் ஆகியனவற்றை ஏன் விடவேண்டும்? இதற்காக யாராவது நம்மைக் கேலி பேசினாலும் பொருட்படுத்தக்கூடாது. அப்படிப் பேசுகிறவர்களா நமக்குச் சோறு போடுகிறார்கள்? அவர்களா நமக்கு நன்மை செய்கின்றார்கள் அவர்களா நம்மைக் காப்பாற்றுகிறார்கள்? ஆனால் மதச் சின்னங்களை அணிந்து நமசிவாய என்று எல்லாக் காலத்திலும் சொல்லிக் கொண்டு இருப்பவர்களை சிவபெருமான் நிச்சயம் காப்பாற்றுவார்.
ருத்ராட்சம் அணிந்த பின் அவரவர், தங்கள் வாழ்க்கையிலேயே இதை அனுபவப் பூர்வமாக உணரலாம்.
ருத்ராட்சம் அணிபவர்கள் கண்டிப்பாக எந்த சூழ்நிலையிலும், ஒரு வினாடி நேரம் கூட ருத்ராட்சதைக் கழற்றவே கூடாது. யார் என்ன சொன்னாலும் அதைப் பொருட்படுத்த வேண்டாம். சிவபெருமானின் அனுக்கிரஹமும், ஆசீர்வாதமும் இருந்தால் மட்டுமே ஒருவருக்கு ருத்ராட்சம் கழுத்தில் அணியும் பாக்கியம் கிடைக்கும். இத்தனை மேன்மைகள் இருந்தும் இதனைப் படித்துப் பார்த்துத் தெரிந்த பின்பும் மனிதராகப் பிறந்தவர்கள் ருத்ராட்சம் அணியவில்லை என்றால் அவர்கள் பிறந்தும் இப்பிறப்பிற்கே பிரயோஜணமில்லாமல் போய்விடுவார்கள் ஆகையால் கண்டிப்பாக ஒவ்வொருவரும் ஐந்து முக ஒரு ருத்ராட்சம் எப்பொழுதும் கழுத்தில் அணிந்து கொண்டே இருக்க வேண்டும்.