சென்னை,

மிழகம் முழுவதும் நடைபெற்று வந்த ரூபெல்லா தடுப்பு ஊசி முகாம் இன்றோடு முடிவடை கிறது. ஆனால், இன்னும் ஒருவாரம் இந்த தடுப்பு ஊசி  ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் போடப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை இயக்குநர் கூறியுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம், 6ந்தேதி முதல் பிப்ரவரி 28ந்தேதி வரை முதல்கட்டமாக ரூபெல்லா தடுப்பூசி முகாம் 5 மாநிலங்களில்  நடைபெற்று வந்தது.

தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி உள்ளிட்ட ஆகிய 5 மாநிலங்களில் முதற்கட்டமாக தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஊசி 9 மாத குழந்தை முதல் 15 வயது வரையுள்ள சிறுவர்களுக்கு போடப்பட்டு வந்தது.

இதற்கிடையில், ரூபெல்லா தடுப்பு ஊசி குறித்து பல்வேறு வதந்திகள் பரவியதால், தடுப்பூசியைப் போட்டுக் கொள்வோரின் எண்ணிக்கை குறைந்தது. பெரும்பாலான பள்ளிக்குழந்தைகளின் பெற்றோர் தடுப்பு ஊசி போடக்கூடாது என பள்ளிகளுக்கு சென்று தகராறும் செய்தனர்.

எனவே, இதுகுறித்து, அரசின் சார்பில் விழிப்புணர்வு விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. அதையடுத்து தடுப்பூசி முகாம் மார்ச் 1 முதல் 15ந்தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று வரை வரை தமிழகத்தில் 79.5 சதவீதம் குழந்தைகளுக்கு (1.4 கோடி) மட்டுமே தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

எனவே, சில இடங்களில் மேலும் ஒரு வாரத்துக்கு தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி கூறியதாவது,

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை வரை 1.4 கோடி குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

மிகக் குறைவாக தூத்துக்குடி மாவட்டத்தில் 50 சதவீதம் மட்டுமே போடப்பட்டுள்ளது.. பிற மாவட்டங்களில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கும், சென்னையில் 86.6 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

விடுபட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் வகையில் சிறப்பு முகாம்கள், ஆரம்ப சுகாதார நிலை யங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில்  மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊசி போடாமல் விடுபட்டவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அவர்  கூறினார்.