திருவனந்தபுரம்,

ட்டிங்கல் தேவாலய தாக்குதல் எனது தலைமையில்தான் நடைபெற்றது என்று ஆர்எஸ்எஸ் தலைவர் கூறியிருப்பது கேரளாவில் மீண்டும் கலவரம் ஏற்பட்டுவிடுமோ என்ற பதற்றத்தை ஏற்படுத்தி  உள்ளது.

 

அட்டிங்கல் என்ற பகுதியில் உள்ள தேவாலயம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என் தலைமை யில்தான் நடைபெற்று என்று விஷ்ணு என்ற ஆர்எஸ்எஸ் முன்னாள் செயலர் சொன்னதாக பல செய்தி சேனல்கள் நேற்று மாலை இந்த தகவல் வெளியானது.

மேலும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களிலும் இது வைரலாக பரவி வருகிறது..

கேரளா மாநில தலைநகர் திருவனந்தபுரம் அருகே உள்ளது அட்டிங்கல் பகுதி.  இங்கு உள்ள தேவாலயம் ஒன்றில் கடந்த  2015ம் ஆண்டு ஜூன் 14 அன்று மதியம் சுமார் 12.30 மணி அளவில் பொதுமக்கள்  பிரார்த்தனை செய்துகொண்டிருந்தபோது, 50க்கும் மேற்பட்ட  ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களால் தாக்கப்பட்டது. தாக்கியபோது பாரத் மாதா கி ஜே என்று அவர்கள் கோஷ மிட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த தாக்குதலில் 8 கிறிஸ்தவர்கள் காயமடைந்தனர்.  தாக்குதல் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு 5 பேரை கைது செய்தனர்.

இந்த தாக்குதல் குறித்து தற்போது பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தாக்குதல் எனது தலைமையில்தான் நடைபெற்றது என்று முன்னாள் ஆர்எஸ்எஸ் செயலர் விஷ்ணு கூறியிருக்கிறார்.

இது கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மீண்டும் கலவர உருவாக காரணமாக அமைந்துவிடுமோ என்று அஞ்சப்படுகிறது.