ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங் (RSS)கின் பொருளாதாரப்பிரிவான சுதேசி ஜாக்ரன் மன்ச் (SJM) மற்றும் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி (BJP) இடையே பல்வேறு கொள்கைகளில் கருத்து வேறுபாடுகள் வலுப்பெற்றுள்ளன. மத்திய நிடி ஆயுக் (NITI Aayog) துறையின் செயல்பாடு, மரபணு மாற்றப்பட்ட கடுகு சோதனைகள், இந்தியாவில் அதிகரித்து வரும் சீனாவின் முதலீடு, உபெர் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்களின் ஊடுருவல், எனப் பட்டியல் நீள்கின்றது.
நிடி ஆயுக்கின் முக்கியப் பதவிகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் தேர்வுசெய்து நியமித்த அரவிந்த் பணகரியா (துணை தலைவர்) மற்றும் அமிதாப் காந்த் (தலைமை நிர்வாக அதிகாரி) ஆகியோர் மீடு கடும் அதிருப்தியில் உள்ளதாகச் சுதேசி ஜாக்ரன் மன்ச் (SJM) வெளிப்படையாகத் தெரிவித்துள்ளது.
முனைவர். பானகாரியா, கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறை பேராசிரியர், ஆசிய அபிவிருத்தி வங்கியின், முன்னாள் தலைமை பொருளாதார நிபுணர்.
கான்ட் , ‘ இன்ங்கிரெடிபில் (நம்பமுடியாத) இந்தியா’, ‘ ஸ்டார்ட் அப் இந்தியா’ மற்றும், மேக் இன் இந்தியா ஆகிய பிரச்சாரங்கள் பின்னால் உந்து சக்தியாக வெவ்வேறு பதவிகளிலிருந்து மூளையாக்ச் செயல்பட்டவர்.
ஜனவரி 1, 2015ல் திட்டக் கமிஷன் கலைத்துவிட்டு மத்திய அரசு துவங்கப்பட்ட நிதி ஆயுக் அமைப்பைத் துவங்கியது. இந்த அமைப்பு துவங்கி இரண்டு ஆண்டுகள் முடிவடைந்ததையொட்டி இந்த ஜனவரி மாதம் பத்தாம் தேதி, எஸ்.ஜே.எம் தலைமை, பொருளாதார வல்லுனர்கள் , பல்வேறு நிபுணர்கள் கொண்ட குழு இவ்வமைப்பின் செயல்பாடுகளை ஆய்வு செய்தது.
இதன் முடிவில், எஸ்.ஜே.எம். தலைமை இந்த அமிப்பின் செயல்பாடுகள் பிந்தங்கியுள்ளதாகக் கருத்து தெரிவித்துள்ளது.
எஸ்.ஜே.எம் தேசிய ஒருங்கிணைப்பாளர் காஷ்மீர் லால், நிதி ஆயுகில் முக்கிய பொருப்பில் இருக்கும் இவ்விருவருக்கும் கள நிலவரம் மற்றும் இந்தியாவின் பன்முகத்தன்மை குறித்த அடிப்படை உண்மைகள் கூடத் தெரியாதது துரதிடவசமானது எனக் குற்றம் சாட்டினார். எஸ்.ஜே.எம் தலைமை நிதி ஆயுக் அமைப்பு முழுமையாகச் சீரமைக்கப்பட வேண்டும் எனக் கோரியுள்ளது.
அஸ்வினி மகாஜன், தேசிய துணை ஒருங்கிணைப்பாளர், எஸ்.ஜே.எம். கூறுகையில், “ நிதி ஆயுக்கின் 23 தகவலறிக்கைகளை ஆய்வு செய்ததில், இந்த அமைப்பின் செயல்பாடுகள் மற்றும் அதன் பரிந்துரைகள் தரமற்றவையாக உள்ளது கண்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தோம். அவை ஒரு எம்.ஃபில் படிப்பிற்கான விளக்கவுரைகளாகச் சமர்ப்பிக்க கூடத் தகுதியற்றவையாக இருந்தன.
அதுமட்டுமின்றி, பிரதமர் மோடியின் தேசியவாத மற்றும் அரசியல் நிலைப்பாடுகளுக்கு நேரெதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
ஆர்.எஸ்.எஸ் மற்றும் எஸ்.ஜே.எம். தலைமை, நிடி ஆயுக் தலைவர்கள்மீது காட்டமாக இருப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, நிடி ஆயுக் தலைவர், பண மதிப்பிழக்க நடவடிக்கைகுறித்து பேசுகையில், “பணமில்லா பொருளாதாரம்”திற்கு இந்த நடவடிக்கை பேருதவியாய் இருக்குமென்று வெளிப்படையாக உற்சாகத்தை வெளிப்படுத்தியது அவர்களுக்கு எரிச்சலை உண்டு பண்ணியுள்ளது.
பண மதிப்பிழக்கம் டிஜிட்டல் பரிமாற்றங்களுக்கு வழிவகுப்பதை வரவேற்கின்றது. ஆனால் ஒரு பணமில்லா பொருளாதாரம் மக்கள்மீது பலவந்தமாய் திணிக்கப்படவும் அமல்படுத்தப்படவும் வாய்ப்பில்லை என்று ஆர். எஸ். எஸ். மற்றும் எஸ்.ஜே.எம். கருதுகின்றது.
பிரதமர் மோடி கூடத் தன் உரைகளில் “ ஒரு ‘குறைந்த பண’ பொருளாதாரம் குறித்து தான் குறிப்பிடுகின்றார் ஆனால் நிதி ஆயுக் அதிகாரிகள் ஒரு பணமில்லா பொருளாதாரம் பற்றிக் குரல் கொடுப்பது அதிச்சியாய் உள்ளது. மேலும் நிதி ஆயுக் தலைவர் 2020 ஆண்டுவாக்கில் பற்று மற்றும் கடன் அட்டைகள் பயன்பாட்டிலிருந்து மறைந்துவிடுமெனவும் கூறுகின்றார். அவரின் இந்தக் கூற்றிலிருந்து அவருக்கு கொடுக்கப்பட்ட விவரம் போதுமானத் தெளிவாக இல்லை, அல்லது அவர்களுக்கு அதைப் புரிந்து கொள்ளக் கூடிய தகுதி இல்லை” என்று அடையாளம் கூறவிரும்பாத ஒரு ஆர்எஸ்எஸ் தலைவர் கூறினார்.
எஸ்.ஜே.எம். பகிரங்கமாகத் தங்களை விமர்சித்ததை கண்டு NITI Aayog உயர்மட்ட செயலர்கள் குழம்பிப் போய் உள்ளனர். எங்கள் வேலைபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், அவர்கள் என்னிடம் நேரிடையாக்க் கேள்விகள் கேட்கட்டும். நான் விளக்க அளிக்கத் தயாராகவுள்ளேன் ” எனக் கன்ட் கூறினார்.
“என்னிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை. எனக்கும் RSS தலைவர்களுக்கும் நேரிடையானத் தொடர்பு கிடையாது எனவே அவர்களோடு அதிகத் தகவல் பறிமாற்றம் இல்லை. என் தேசப்பற்றை சந்தேகப்பட யாருக்கும் தகுதியில்லை” எனக் கூறினார்.
ஆர்.எஸ்.எஸ். மற்றும் எஸ்.ஜே.எம் அமைப்பு இதே போன்று அரசியல் விமர்சனம் செய்து5f, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனுக்கு பதவி நீட்டிப்பு செய்யவிடாமல் செய்தது இங்குக் குறிப்பிடத் தக்கது.
நீண்ட நெடிய மோதல்
மே 2014 ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற்று, மோடி பிரதமராகப் பொறுப்பேற்றது. அதுமுதலே, பல சந்தர்ப்பங்களில் ஆர்.எஸ்.எஸ். விடுத்துவரும் கோரிக்கைகளில் பலவற்றை ஏற்றுக்கொண்ட போது சில கோரிக்கைகளை நிராகரித்து விட்டதால் கசப்புணர்வு நீடித்துவருகின்றது.
எடுத்துக்காட்டாக 2015 ல் நில கையகப்படுத்துதல் சட்டத்தில் சில சர்ச்சைக்குரிய திருத்தங்களைத் திரும்பப் பெற வேண்டும் என எஸ்.ஜே.எம். உத்தரவின் பேரில் அரசு திரும்ப்ப்பெற்றது.
2016-ல் மொரிஷியஸ், சைப்ரஸ், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இரட்டை வரி தவிர்ப்பு உடன்படிக்கைகளில் திருத்தம் செய்து “மூலதன ஆதாயங்கள் வரி” செலுத்துவதை பலர் தவிர்க்கப் பயன்படுத்திய ஒரு ஓட்டை மூட எஸ்.ஜே.எம். கொடுத்த அறிவுரை அரசுக்கு உதவியது. நீண்டகாலமாய் எச்.ஜே. எம். கோரிக்கை விடுத்து வரும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (அன்னிய) வரிவிதிக்கும் திட்டம் எதிர்வரும் மத்திய நிதிநிலை-2107 அறிக்கையில் இடம்பெறும் வாய்ப்பு உள்ளது.
மோடி அரசு அறிமுகப்படுத்திய பல்வேறு நலத்திட்டங்கள் ஆர்எஸ்எஸ் / ஜனசங்கத்தின் சிந்தனையாளரும் தீன் தயாள் உபாத்யாயா இன் ‘அந்த்யோதயா’ கருத்துக்களின் பிரதிபலிப்பே ஆகும். சுய உதவிக் குழுக்கள், அனைவருக்கும் மின்சாரம், வீடு, எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் வங்கி கணக்குகள் வழங்கும் திட்டங்கள் அதில் அடங்கும்.
ஆர்.எஸ்.எஸ் தலைவர்களான பையாஜி ஜோஷி மற்றும் கிருஷ்ணா கோபால், பொருளாதார பிரச்சினைகள்குறித்து தொடர்ந்து அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக் பல்வேறு அமைச்சகங்களில் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) போன்ற ஆர்.எஸ்.எஸ் உடன் இணைந்த அமைப்புகளின் உறுப்பினர்கள் சிறப்புப் பணி (OSD) பெயரில் அதிகாரிகளாக சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் மோடியின் அமைச்சரவை மாற்றத்தில் ஆர்.எஸ்.எஸ். ஒரு முக்கிய பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது.
வெளிநாட்டு மூலதன விசயத்ஹ்டில் ஆர்.எஸ்.எஸ் எஸ்.ஜே.எம் அமைப்பின் கோரிக்கையை நிராகரித்துவிட்டு வெளிநாடுகளுக்கு பயணம் செய்து பல்வேறு அந்நிய முதலீடுகளைகூரி வருவது மக்கள் அளித்த தீர்ப்பிற்கு எதிரானதென்று எச்.ஜே. எம். தலைவர் காஸ்மிரி லால் தெரிவித்தார்.