டில்லி

ர் எஸ் எஸ் அமைப்பின் பிரிவான ஸ்வதேசி ஜாக்ரண் மஞ்ச் மோடி அரசின் வர்த்தக ஒப்பந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 10 நாட்கள்  போராட்டத்தை அறிவித்துள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளான ஆசியன் குழுவுடன் ஆறு வர்த்தக நேச நாடுகள் இணைந்து ஒரு வர்த்தக ஒப்பந்தம் அமைக்க முடிவு செய்துள்ளன.   இந்த ஒப்பந்தத்தில் 10 தென்கிழக்கு ஆசிய நாடுகளும் ஆறு வர்த்தக நேச நாடுகளும் இடம் பெற்றுள்ளன.  இந்த ஆறு நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.  இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்நாடுகளுக்கு இடையே குறைந்த இறக்குமதி தீர்வை அல்லது இறக்குமதி தீர்வை அற்ற வர்த்தகம் நடைபெற உள்ளது.

கடந்த விஜயதசமி அன்று நடந்த ஆர் எஸ் எஸ் விழாவில் அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் இந்த ஒப்பந்தம் உள்நாட்டுப் பொருள்கள் விற்பனையை அழிக்கும் என எச்சரிக்கை விடுத்தார்.    இந்த நிகழ்வு நடந்த 3  தினங்களில்  ஆர் எஸ் எஸ் அமைப்பின் கிளையான ஸ்வதேஷி ஜாக்ரன் மஞ்ச் நேற்று இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

நேற்று வெளியிடப்பட்ட இந்த  அறிக்கையில் அமைப்பின் தலைவர் அஸவினி மகாஜன், “ தற்போது நாடு உற்பத்தி மற்றும் விவசாயம் உள்ளிட்டவற்றில் கடும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது.  இதனால் பலர் வேலை இழந்துள்ளனர்.   இந்த உற்பத்திக் குறைவுக்குக் காரணம் ஒருங்கிணைந்த தொழில் கொள்கை ஆகும்.   இதனால் கடந்த 1991 முதல் இந்நிலை உள்ளது.

கடந்த 10 ஆண்டுக்கு முன்பு இந்தியா ஏற்படுத்திய வர்த்தக ஒப்பந்தங்களால் வெளிநாட்டிலிருந்து மலிவான பொருட்கள் வெளிநாடுகளிலிருந்து ஏராளமாக வரத் தொடங்கின.   இதன் மூலம் ஏற்பட்ட உற்பத்திக் குறைவு இன்றும் தொடர்கிறது.    அது மட்டுமின்றி இந்த ஒப்பந்தத்தால் இந்தியா கடண்டஹ் வருடம் மட்டும் 10400 கோடி டாலர் அளவுக்கு வர்த்தகத்தை இழந்துள்ளது.

நமது அமைப்பு இந்தியாவின் இந்த ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்க்கிறது.   இதனால் அரசு மட்டுமின்றி தனியார் துறைகளும் கடும் நஷ்டத்தை அடையும்.   எனவே இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மாவட்டத் தலைநகர்களில் போராட்டம் நடைபெற உள்ளது.   இந்த போராட்டம் பத்து நாட்களுக்கு அதாவது அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி வரை நடைபெறும்.” எனத் தெரிவித்துள்ளார்.