பானிப்பட்

டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் வாடகை இடங்களில் அரங்கம் அமைத்த ஆர் எஸ் எஸ் தற்போது சொந்த இடம் வாங்கி நிரந்தர அரங்கம் அமைக்க உள்ளது.

அரியானா மாநிலம் பானிப்பட் அருகே சாமல்கா என்னும் கிராமத்தில் சுமார் 21 ஏக்கர் நிலத்தை ஆர் எஸ் எஸ் விலைக்கு வாங்கி உள்ளது.  அங்கு குருகுல அமைப்பில் கட்டங்கள் கட்டவும், ஒரு நிரந்தர விழா அரங்க அமைக்கவும் திட்டமிட்டுள்ளது.   இதன் மூலம் வட இந்தியாவில் வாடகை இடங்களில் அரங்கம் அமைத்த ஆர் எஸ் எஸ் தற்போது சொந்த இடத்தில் கூட்டங்கள் நடத்தும் என தெரிய வருகிறது

இது பற்றி ஆர் எஸ் எஸ் நிர்வாகி ஒரு வர் தெரிவித்ததாவது :

“டில்லி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களுலும்,  வட இந்தியாவின் பல இடங்களிலும் ஆர் எஸ் எஸ் நிகழ்வுகள் எல்லாமே வாடகை இடத்தில் தற்காலிக அரங்குகள் அமைத்து நடை பெற்று வந்தன.   தற்போது பானிப்பட் அருகே உள்ள சாமல்கா கிராமத்தில் வாங்கப்பட்டுள்ள சொந்த இடத்தில் அரங்கம் உட்பட பல கட்டிடங்களை கட்ட இந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது.

இங்கு குருகுல அமைப்பில் கிராமப்புறப் பாணியில் கட்டிடங்கள் கட்டப்படும்    அடுக்கு மாடிகள் என்பதே இருக்காது.  வெறும் தரைத்தளம் மட்டுமே அமைக்கப்படும்.  அதே நேரத்தில் அனைத்து கட்டிடங்களிலும் நவீன வசதிகள் இருக்கும்.  கட்டப்போகும் அரங்கில் ஆர் எஸ் எஸ் நிகழ்வுகள் மட்டுமின்றி பா ஜ க போன்ற கட்சிகள் ஏதும் நிகழ்வு நடத்த விரும்பினால் அதுவும் அனுமதிக்கப்படும்” எனக் கூறி உள்ளார்.

இதற்கு முன்பு ஜின்ச்ஜோலி என்னும் இடத்தில் உள்ள 12 ஏக்கர் நிலப்பரப்பை வாங்க ஆர் எஸ் எஸ் திட்டமிட்டிருந்தது,    அது டில்லிக்கு மிக அருகில் இருந்தது.   மேலும் நெடுஞ்சாலைக்கு மிக அருகில் பலவித வசதிகளுடன் இருந்தது.   ஆனால் அந்த இடத்துக்கு வருவதற்கான பாதை மிகவும் குறுகலாக இருந்ததால் அது நிர்வாகத் தலைவர்களால் நிராகரிக்கப்பட்டது.