டில்லி

மின்சார வாகனங்களை வாங்குவோருக்கு ரூ.1.5 லட்சம் வரை ஊக்கத்தொகை வழங்க உள்ளதாக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.

நாடெங்கும் சுற்றுச் சூழல் பாதிப்பு காரணமாகப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  டில்லியில் மாசு அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது.  இதற்கு முக்கிய காரணம் பெட்ரோல் மற்றும் டீசலால் இயங்கும் வாகனங்கள் ஆகும்.

இதையொட்டி டில்லி அரசு மின்சார வாகனக் கொள்கையை இன்று வெளியிட்டுள்ளது.

இதை வெளியிட்ட டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் “டில்லியில் காற்று மாசைக் குரைக்கும் நோக்கிலும், வேலை வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கிலும் மின்சார வாகன கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார வாகனங்களுக்கான பதிவுக்கட்டணம் மற்றும் சாலை வரி ரத்து செய்யப்படுகிறது.  மேலும் மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்க ரூ.1.5 லட்சம் வரை ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. “ என அறிவித்துள்ளார்.