சென்னை; தமிழ்நாட்டிலுள்ள 3,808 அரசு நூலகங்களை புதுப்பிக்க ரூ.84 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நகற்புற பகுதிகளி உள்பட கிராமப்புறங்களில் அரசு நூலகங்கள் செயல்பட்ட வருகின்றன. சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு நூலகங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான நூலகங்கள் பல ஆண்டுகள் பழமையானது மட்டுமின்றி பழுதடைந்து காணப்படுகிறது. இதை பழுதுபார்த்து புதுப்பிக்க பொதுமக்களும், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் 3,808 நூலகங்களை புதுப்பிக்க ரூ.84 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது. முதல் கட்டமாக 2021-22ம் ஆண்டில் 4,116 நூலகங்களை புதுப்பிக்க ரூ.91.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.நடப்பு ஆண்டில் 3,808 நூலகங்களை புதுப்பிக்க ரூ.84.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நூலகங்கள் 2024ம் ஆண்டுக்குள் புதுப்பிக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.