சென்னை: சுகாதாரத்துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்ததாக,  முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது  புகார் கூறப்பட்டு உள்ளது. அதன்படி ரூ.72 லட்சம் மோசடி செய்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், மாநில சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் டாக்டர் சி.விஜயபாஸ்கர். இவர் சுகாதாரத்துறையில், செவிலியர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உள்ளிட்ட பணிகளை வாங்கித் தருவதாகக் கூறி,, 72 லட்ச ரூபாயைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டதாகப் பாதிக்கப்பட்டவர்களான நிலாவேந்தன், விக்டர் ஆகியோர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய விக்டர் என்பவர்,  பத்திரிகை துறையில் செய்தியாளராகப் பணியாற்றிவந்த நிலாவேந்தன் என்பவர் மூலமாக 2018ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரிடம் செவிலியர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர், மருத்துவர் போன்ற பணிகளைப் பெற்றுத்தர அவருக்கு தலா 7 லட்ச ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை  வாங்கிக் கொடுத்ததாகவும், அதன்படி பலருக்கும் அவர் வேலை அளித்துள்ளார். ஆனால் மேலும் பலருக்கு பணி வழங்கப்படவில்லை. இதுகுறித்து அவரது உதவியாளரிடம் கேட்டபோது, சட்டமன்ற தேர்தலை காரணம் காட்டி பதில் தெரிவிக்க மறுத்து விட்டதாகவும், தற்போது பணத்தை திருப்பி கேட்டால் தர மறுப்பதாக கூறியதுடன்,எங்களிடம் இருந்து 72 லட்ச ரூபாயைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டனர்., அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

வருமானத்துக்கு அதிகமாக ரூ.51கோடி சொத்து குவிப்பு! விஜயபாஸ்கர்மீது லஞ்சஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு…