சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்துவதற்கு ரூ.621 கோடி செலவாகும் என தமிழக தேலைமைச்தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்னும் சில மாதங்களில நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்துவதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது. அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறது. தொகுதிப் பங்கீடு உள்பட கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இநத நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு, தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை நடத்த ரூ.621 கோடி தேவை என கூறினார். இது தொடர்பாக தமிழக அரசிடம் நிதி கேட்டுள்ளோம் என்றவர், தற்போது கொரோனா காலம் என்பதால், வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்பட உள்ளதாகவும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதனால் செலவு தொகை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது என்றார்.