டில்லி:
மோடி தலைமையிலான மத்திய அரசு இன்று தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு பல சலுகைகள் அறிவித்திருப்பது போல, பாஜக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர்.
ஆனால் சில மாநில அரசுகள் இதைவிட அதிக அளவிலான சலுகைகளை விவசாயிகளுக்கு வழங்கி அவர்களை வாழ வைத்து வருகிறது.
ஆனால், பட்ஜெட்டில், 22 வேளாண் விளைபொருட்களுக்கு அதன் உற்பத்தி செலவை விட 50 சதவீதம் கூடுதலாக குறைந்தபட்ச விலை நிர்ணயம் என் றும், விவசாயிகளே கால்நடை வளர்த்தால், அவர்களுக்கு 2% வட்டி தள்ளுபடி என்றும் தெரிவித்தார்.
2020 – க்குள் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டு இருப்பதாகவும், விவசாயிகளுக்கான வட்டி மானியம் இரட்டிப்பாக்கப்படும் என்றும், இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் வங்கிக் கடன்களுக்கு 3% வரை வட்டி மானியம் விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்குவதன் மூலம் ரூ.75,000 கோடி செலவாகும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், 2 ஏக்கர் வைத்துள்ள விவசாயிகளுக்கு பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனாவின் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 6 ஆயிரம் அவர்களது வங்கி கணக்கில், 3 தவணையாக செலுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. சாதாரண கூலி தொழி லாளிக்கே மாதம் 6 ஆயிரம் ரூபாய் போதாத நிலையில், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் அளிப்போம் என்று மோடி அரசு கூறியிருப்பது வெறும் கண்துடைப்பு செயல் என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
அதே வேளையில் பல மாநில அரசுகள் விவசாயிகளுக்கு இதைவிட மிகச்சிறப் பான சலுகைகளை அறிவித்து, விவசாயிகளை வாழ வைத்து வருகிறது.
குறிப்பாக, ஒடிசா மாநிலத்தில் (Odisha’s Kalia program) கலியா திட்டம் செயல் படுத்தப்பபட்டு வருகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் வருவாயை அதிகப்படுத்துவதற்கான (KALIA -Krushak Assistance for Livelihood and Income Augmentation) என்ற திட்டத்தை அறிவித்துள்ளது.
அதன்படி ஒவ்வொரு பருவத்தின்போதும், குறைந்த பட்ச ஆதார விலையாக விவசாய பயிர்களின் விலை கிலோ ரு.25 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின்படி காரிப் மற்றும் ராபி பருவங்களில் தலா 5000 ரூபாய் என மொத்தமாக 10000 ரூபாய் சாகுபடி செய்வதற்கான நிதியுதவியாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் அளிக்கப்பட்டு வருகிறது.
அதுபோல தெலுங்கானா மாநிலத்தில் ரிது பந்து திட்டத்தின் கீழ் ரூ.8 ஆயிரம் விதம் வழங்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
தெலுங்கானாவில் கடந்த ஆண்டு ரிது பந்து மற்றும் ரிது பீமா என்ற இரண்டு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. ரிது பந்து திட்டத்தின்படி விவசாயிகளுக்கு உதவியாக ஏக்கருக்கு ரூ.8,000 (இரு சம தவணைகளாக) வழங்கப்படும் என்றும், ரிது பீமா என்பது ஆயுள் காப்பீடு திட்டமாகும்.
இதில் காரணமின்றி விவசாயி இறக்கும் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் இந்த திட்டம் வகை செய்கிறது.