சென்னை: அங்கன்வாடி எல்கேஜி, யுகேஜி ஆசிரியர்களுக்கு ஊதியம் உயர்த்துவது குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறி வந்த நிலையில், எல்கேஜி, யுகேஜி ஆசிரியர்களுக்கு ரூ.5000/- தொகுப்பூதியம் வழங்கப்படும் என அரசாணையை தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது. இதனால், அமைச்சரின் தகவல் பொய்த்துபோய் உள்ளது.
அங்கன்வாடி மையங்களில் செயல்படும் LKG, UKG வகுப்புகளை தொடர்ந்து நடத்த அனுமதி வழங்கப்படும் என்றும், அதற்கான ஆசிரியர்களுக்கு ரூ.5000/- தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்யலாம் என ஏற்கனவே தமிழகஅரசு அனுமதி வழங்கியது. ஆனால், ரூ.5ஆயிரம் தொகுப்பூதியம் மிகவும் குறைவு என அரசியல் கட்சிகள் விமர்சனம் எழுப்பி வந்தன. இதனால், இதுகுறித்து ஆய்வு செய்யப்படும் என்றும், முதலமைச்சர் இதுதொடர்பாக அறிவிப்பார் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியிருந்தார்.
இந்த நிலையில், அமைச்சரின் பேச்சை பொய்யாக்கி, தமிழகஅரசு அரசாணை வெளியீட்டுள்ளது. அரசாணையில், அங்கன்வாடி மையங்களில் செயல்படும் LKG, UKG வகுப்புகளை தொடர்ந்து நடத்த அனுமதி வழங்கப்படுவதாகவும், அவர்களுக்கு தொகுப்பூதியமாக ரூ.5000/- மட்டுமே வழங்கப்படும் என்றும், தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய அனுமதி அளித்தும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
பள்ளிகளில் கூட்டம் நடத்த எந்தவொரு அமைப்பினருக்கும் அனுமதி இல்லை! அமைச்சர் அன்பில் மகேஷ்