சேலம்:

சேலம் மாவட்டத்தில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கும்போது, ரூ.200-க்கு பதில் ரூ.500 வந்ததால், பொதுமக்கள் அதிர்ச்சியும், வியப்பும் அடைந்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே எஸ்பிஐ வங்கி ஏடிஎம் உள்ளது. இங்கு சம்பவத்தன்று ஒருவர் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது,  ஏடிஎம்-ல் ரூ.200-க்கு பதில் ரூ.500 வந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தனது நண்பர்கள் உள்பட சிலரிடம் தெரிவித்து உள்ளார்.

இதைத்தொடர்ந்து, வாடிக்கையாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஏடிஎம் இயந்திரத்துக்கு வந்து  பணம் எடுத்துள்ளனர். இந்த தகவல் வங்கி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. உடடினயாக அங்கு வந்த அதிகாரிகள், ஏடிஎம் மையத்துக்கு பூட்டு போட்டனர்.

இதுகுறித்து விசாரணை நடத்திய வங்கி அதிகாரிகளி, ஏடிஎம் இயந்திரத்தில் ஆய்வு நடத்தினர். அப்போது, ரூ.200 வைக்க வேண்டிய ரேக்கில் ரூ.500 வைக்கப்பட்டுள்ளதை கண்டனர். பணம் மாற்றி வைக்கப்பட்டதே, ரூ.200க்கு பதில் ரூ.500 ஆக வந்துள்ளது என்றும், பணத்தை மாற்றி வைத்த தனியார் நிறுவனமே பண இழப்புக்கு பொறுப்பு எனவும் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.