கோவை: கோயம்புத்தூரில் ஏழுமலையான் பெயரில் ஏலச்சீட்டு நடத்தி ரு.30 லட்சத்தை ஏப்பம் விட்டு, பயனர்களுக்கு நாமம் போட்ட திமுக பெண் நிர்வாகி தலைமறைவானார். அவரை கைது செய்ய காவல்துறையினர் தேடுதல் வேட்டையை தொடங்கி உள்ளனர்.
கோவையை அடுத்துள்ள சூலூர் நகர திமுக துணை செயலாளராக இருப்பவர் ஜெயா. இவர் திருப்பதி என்னும் பெயரில் கடந்த 15 ஆண்டுகளாக ஏலச்சீட்டு நிறுவனம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதில் நூற்றுக்கணக்கானோர் சேர்ந்து இருப்பதாக வறப்படுகிறது. இந்த ஏலச்ட்டில், கோவை சூலூர், ராமநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்களும் சேர்ந்துள்ளனர். அவர்களிடமும் ஏலச்சீட்டு நிறுவனம் சார்பில் பணம் வசூலிக்கப்பட்டு வந்ததாம்.
ஆனால், சீட்டு முடிந்தவர்களுக்கும், ஏலம் எடுத்தவர்களுக்கும், அதற்கான சீட்டு தொகையை கொடுக்காமல் ஜெயா தாமதப்படுத்தி வந்துள்ளார். . இதன் காரணமாக, சீட்டு எடுத்து வந்தவர்கள் அவருக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். இதனால், பொறுமையிழந்தவர்கள், காவல்துறையினல் புகார் கொடுக்கப்போவதாக தெரிவித்துள்ளனர். ஆனால், அவர்களை மிரட்டி உள்ள ஜெயா, தொலைத்துவிடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால், அதிருப்தியடைந்த வாடிக்கையாளர்கள் 40க்கும் மேற்பட்டோர் சூலூர் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில், போலீசார் நடத்திய விசாரணை நடத்தச் சென்ற நிலையில், நகர திமுக செயலாளர் ஜெயா குடும்பத்தோடு இரவோடு இரவாக தலைமறைவாகியது தெரிய வந்தது.
இதையடுத்து, அவரை தேடும்பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.